EPFO கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – தகவல்களை திருத்துவது எப்படி? ஆன்லைன் செயல்முறைகள் இதோ!

0
EPFO கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - தகவல்களை திருத்துவது எப்படி? ஆன்லைன் செயல்முறைகள் இதோ!
EPFO கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - தகவல்களை திருத்துவது எப்படி? ஆன்லைன் செயல்முறைகள் இதோ!
EPFO கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – தகவல்களை திருத்துவது எப்படி? ஆன்லைன் செயல்முறைகள் இதோ!

EPFO கணக்கில் இருந்து பணத்தை எடுக்கும்போது ஏதேனும் ஒரு தகவல் தவறாக இருந்தால் பணத்தை எடுப்பதில் சிக்கல்கள் நேரிடும். இந்த தகவலை திருத்தங்களை செய்யும் சில எளிய ஆன்லைன் வழிமுறைகளை இப்பதிவில் பார்க்கலாம்.

தரவுகள் திருத்தம்:

பொதுவாக, மாத ஊதியம் பெரும் ஒவ்வொரு நபரும் தனது வருமானத்தில் ஒரு பகுதியை பிஎஃப் கணக்கில் முதலீடு செய்ய வேண்டியது அவசியம் ஆகும். இந்த பணத்தை ஊழியர்கள் பின் நாட்களில் ஓய்வூதிய நிதியாகப் பெற்று பயனடைந்து வருகின்றனர். இது தவிர, வேலை நேரத்தில் கூட ஒரு நபருக்கு எந்த வகையான அவசரத்திலும் குறிப்பாக குழந்தைகளின் கல்வி அல்லது திருமணம் போன்ற தேவைகளுக்காக பணம் தேவைப்பட்டால், அவர் தனது பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுக்கலாம். இதற்காக சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.

இப்போது EPFO அமைப்பில் கணக்கு வைத்திருப்பவரின் 12% அடிப்படை சம்பளத்தில் இருந்து PF ஆக கழிக்கப்படுகிறது. இந்த PFல் இருந்து பணத்தை எடுக்க விரும்புபவர்கள் தங்களது கணக்கில் உள்ள அனைத்து தகவல்களும் சரியாக இருகிறதா என்று தெரிந்து கொள்வது முக்கியம் ஆகும். இல்லையெனில், பணம் எடுக்கும்போது பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இப்போது EPFO பயனர்கள் தங்கள் கணக்கு தகவல்களை வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் மூலம் மேம்படுத்தலாம். அதற்கான சில எளிய வழிமுறைகள் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் தகவல்களை மாற்ற:

  • முதலில் UAN போர்ட்டலை திறக்கவும்
  • பிறகு, உங்கள் EPF கணக்கு, பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்நுழையவும்.
  • அங்கு MODIFY ஆப்ஷனை காண்பீர்கள்.
  • அதில் உள்ள MODIFY BASIC DETAILS என்பதைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது ஒரு புதிய பக்கம் திறக்கும்.
  • இங்கே நீங்கள் கேட்கப்பட்ட விவரங்களை நிரப்ப வேண்டும்.
  • மற்றும் மாற்றத்திற்கான கோரிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
  • ஆதார் அட்டையின் அடிப்படையில் உங்களின் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, ‘கேள்வி மாற்றம்’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • அதன் பிறகு, புதுப்பிப்பு பொத்தானை கிளிக் செய்க.
  • இதற்கு பிறகு, ‘முதலாளியின் ஒப்புதல் நிலுவையில் உள்ளது’ என்று எழுதப்பட்ட அறிவிப்பைக் காண்பீர்கள்.
  • இப்போது நீங்கள் உங்கள் பணியாளரைத் தொடர்புகொண்டு கோரிக்கையை ஏற்கும்படி கேட்க வேண்டும்.
  • உங்களை பணியமர்த்துபவர் ஒப்புதல் அளித்தவுடன், EPF அலுவலகம் 30 நாட்களுக்குள் மாற்றங்களை புதுப்பிக்கும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!