திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு – நாளை மறுநாள் (ஆகஸ்ட் 1) முதல் டிக்கெட் விநியோகம்!

0
திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு - நாளை மறுநாள் (ஆகஸ்ட் 1) முதல் டிக்கெட் விநியோகம்!
திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு - நாளை மறுநாள் (ஆகஸ்ட் 1) முதல் டிக்கெட் விநியோகம்!
திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு – நாளை மறுநாள் (ஆகஸ்ட் 1) முதல் டிக்கெட் விநியோகம்!

ஆந்திராவில் உள்ள புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் 2 வருடங்களுக்கு பிறகு பிரம்மோற்சவ விழா செப்டம்பர் 7ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் அடுத்த வாரம் பவித்ரோற்சவம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்களுக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் இந்தாண்டு செப்டம்பர் 7ம் தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. அன்றைய தினம் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி திருமலைக்கு வந்து மூலவர் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் அளிக்க உள்ளார். பிறகு அக்டோபர் 1ம் தேதி கருடசேவை, 2ம் தேதி தங்கத் தேரோட்டம், 4ம் தேதி தேர் திருவிழா, 5ம் தேதி சக்கர ஸ்நானம் என விழாவானது அக்டோபர் 5ம் தேதி நடைபெறும். இந்த பிரம்மோற்சவ விழாவானது 2 வருடங்களுக்கு பிறகு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து தேவஸ்தானம் பிரம்மோற்சவ விழாவுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

இந்த பிரம்மோற்சவ விழா நாட்களில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தரிசன சேவை ரத்து செய்யப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும் பிரம்மோற்சவ விழாவை தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 8ம் தேதி பவித்ரோற்சவம் விழா நடைபெற உள்ளது. இதில் பக்தர்கள் கலந்து கொள்ள ஆன்லைன் தரிசன டோக்கன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 600 தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் வழங்கப்பட உள்ளனர். இந்த பவித்ரோற்சவத்தில் கலந்து கொள்ளவுள்ள பக்தர்கள் பாரம்பரிய உடையில் காலை 7 மணியளவில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் 1-க்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 20,408 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதாரத்துறை ஷாக் ரிப்போர்ட்

மேலும் தரிசன டோக்கன்களுடன் ஏதேனும் அசல் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை பக்தர்கள் கொண்டு வந்து தேவஸ்தான அதிகாரிகளிடம் காண்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tirumala.org அல்லது www.tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பவித்ரோற்சவ விழாவுக்கான டிக்கெட் விநியோகம் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் ரூ. 2,500 செலுத்தி முன்பதிவு செய்யலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!