சிலிண்டர் உபயோகிப்போர் கவனத்திற்கு – விபத்துகளை தடுப்பதற்கான எளிய வழிமுறைகள்!
இந்தியாவில் சிலிண்டர்கள் விபத்துகள் அவ்வப்போது ஏற்படுகிறது. அதனால் நாம் சிலிண்டரை வாங்கும் போது அதனை சரி பார்த்து வாங்க வேண்டும். முக்கியமாக நாம் சரிபார்க்க வேண்டிய விஷயம் என்ன என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.
சிலிண்டர்:
இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமையல் எரிவாயு அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருப்பதால் இதன் விலை அதிகரிப்பு அனைத்து தரப்பு மக்களையும் பாதிப்புக்குள்ளாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்புக்கு ஏற்ப கேஸ் சிலிண்டர் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் விலை 1000 ரூபாயை கடந்துள்ளது. இந்த விலை ஏற்றத்தை குறைக்க கோரி பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்தியாவில் மத்திய அரசால் 2.0 என்ற திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இத்திட்டத்தின் மூலம் பெண்களுக்கு இலவச சிலிண்டர் மற்றும் அடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிலிண்டர் எரிவாயு விபத்துகளை தடுக்க பல்வேறு அறிவுரைகளும் வழங்கப்பட்டு வருகிறது. நாம் கவன குறைவாக கேஸ் அடுப்பை உபயோகப்படுத்தும் போது எதிர்பாராத நேரங்களில் விபத்து ஏற்பட நேரிடும். சிலிண்டர்கள் விபத்துக்கு காலாவதியான சிலிண்டர்களும் முக்கிய காரணம் என்று பலர் கூறுகின்றனர். சிலிண்டர் காலாவதி தேதியை சிலிண்டர் வாங்கும் வாடிக்கையாளர்கள் பார்த்து வாங்குவது அவசியம்.
நான்கு முறை காதல் தோல்வி, KPY பாலா வாழ்க்கையில் நடந்த சோகம் – ரசிகர்கள் உருக்கம்!
வெடி விபத்துக்கு அவையும் ஒரு காரணமாக இருப்பதால் மக்கள் அது குறித்து அறிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. கேஸ் சிலிண்டர்களுக்கு காலாவதி தேதி உள்ளது என்பதை முதலில் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஒரு கட்டத்துக்குப் பிறகு சிலிண்டர்கள் பழையதாகி வாயு அழுத்தம் தாக்க முடியாமல் வெடித்து சிதறிவிடும் என எச்சரிக்கின்றனர். விற்பனையாளரிடம் இருந்து LPG சிலிண்டரை எடுக்கும் போது, கண்டிப்பாக காலாவதி தேதியை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இந்த தேதி சிலிண்டரின் மேல் பகுதியில் எழுதப்பட்டுள்ளது. A, B, C அல்லது D இல் எழுதப்பட்ட எண்ணைக் காணலாம். மேலும், அந்த எண்ணுக்கு முன்னால் 22, 23, 24 அல்லது தேதி குறிப்பிடத்தக்கது.