Credit & Debit கார்டு பயனர்கள் கவனத்திற்கு – செப்.1ல் முதல் புதிய விதிகள் அமல்!
இந்தியாவில் ஷாப்பிங் மால் மற்றும் வணிக நிறுவனங்களில் பொருட்களை கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலமாக வாங்கும் போது வாடிக்கையாளர்களின் வங்கி விவரங்கள் அனைத்தும் திருடப்படுகிறது. இதனை தடுக்க ரிசர்வ் வங்கி செப்.1 முதல் புதிய விடுமுறையை அமல்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி
இந்தியாவில் பண பரிவர்த்தனைகள் எளிமைக்கப்பட்டு வரும் நிலையில் மோசடிகளும் அதிகரித்து வருகிறது. இது போன்ற மோசடிகள் நடைபெறுவதை தவிர்ப்பதற்காக ரிசர்வ் வங்கி அவ்வப்போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதனால், ரிசர்வ் வங்கி டோக்கனைசேஷன் என்னும் முறையை அறிமுகம் செய்துள்ளது. அதாவது, பொதுவாகவே மால்கள், சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலமாக பொருட்களை வாங்கும் போது உங்களது வங்கியின் பெயர் என அனைத்து விவரங்களும் சென்று விடும்.
இதனால், பல்வேறு இடங்களில் மோசடிகளும் நடைபெற காரணமாக இருக்கிறது. இது போன்ற மோசடிகளில் இருந்து தப்பவே வாடிக்கையாளர்களின் விவரங்களை சேமிக்காத வண்ணம் டோக்கனைசேஷன் என்னும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, வாடிக்கையாளர் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் உள்ள சிவிவி எண் போன்ற விவரங்களைக் கொண்டு அறியும் முறைக்கு பதிலாக விவரங்களை அறிந்துகொள்ளாத அட்டைக்கென்று ஒரு டோக்கன் எண் வழங்கப்படும்.
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை மையம் எச்சரிக்கை!
மேலும், வாடிக்கையாளர் டோக்கனைசேஷன் மூலம் உருவாக்கப்பட்ட டோக்கனை பயன்படுத்தி பரிவர்த்தனையை செய்ய ஜூன் 30 ஆம் தேதி வரைக்கும் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. பின்னர், தொழில்நுட்ப அமைப்பில் உள்ள சிக்கலை கருத்தில் கொண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வரைக்கும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஷாப்பிங் மால்கள் என அனைத்து வணிக நிறுவனங்களிலும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் இந்த முறையை அமல்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்