கிரெடிட் & டெபிட் கார்டு பயனர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
கிரெடிட் & டெபிட் கார்டு பயனர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
கிரெடிட் & டெபிட் கார்டு பயனர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
கிரெடிட் & டெபிட் கார்டு பயனர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தும் போது பலவித ஆன்லைன் மோசடிகள் நடைபெறுகிறது. இது போன்ற மோசடிகளில் இருந்து பாதுகாப்பதற்காக ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

RBI அறிவிப்பு:

உலகம் முழுவதும் டிஜிட்டல் முறைக்கு மாறிக்கொண்டிருக்கும் வேளையில் பண பரிவர்த்தனை முதல் அனைத்து வேலைகளையும் மொபைல் மூலமாகவே ஒரு நொடியில் செய்ய முடிகிறது. ஆனால், அது பாதுகாப்பானதாக இருக்கிறதா என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். இந்நிலையில், கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்துபவர்கள் தங்களது வங்கி விவரங்கள் மற்றும் தரவுகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது தொடர்பான அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

அதாவது, கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மூலமாக பணம் கொடுக்கும் போது உங்களது வங்கி விவரங்கள் அனைத்தும் திருடப்பட்டு மொத்த பணத்தையும் திருடிக்கொள்ளும் அபாயம் இருக்கிறது. இது போன்ற சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக ரிசர்வ் வங்கி தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது. அதாவது, ஆன்லைன், பாயின்ட் ஆஃப் சேல் மற்றும் இன்-ஆப் பரிவர்த்தனைகளில் பயன்படுத்தப்படும் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளின் தரவுகள் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் தனித்துவமான டோக்கன்களால் மாற்றப்பட வேண்டும் என RBI அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் இனி UPI பணபரிவர்த்தனை செய்ய கட்டணம் – RBI ஆலோசனை !

Exams Daily Mobile App Download

அதாவது, இந்த டோக்கன் மூலமாக கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளின் தரவுகள் பாதுகாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டோக்கன்கள் மூலமாக வாடிக்கையாளர் விவரங்களை வெளியிடாமல் பணத்தை செலுத்த முடியும். மேலும், வாடிக்கையாளர்களுக்கு இந்த டோக்கன் முறை வசதியாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் மோசடியில் இருந்தும் வாடிக்கையாளர் தப்பித்துக்கொள்ள இது சிறந்த முறையாக இருக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!