அரசு பணியாளர்களின் கவனத்திற்கு – ஜூலை 1 முதல் புதிய திட்டம் அறிமுகம்!

0
அரசு பணியாளர்களின் கவனத்திற்கு - ஜூலை 1 முதல் புதிய திட்டம் அறிமுகம்!
அரசு பணியாளர்களின் கவனத்திற்கு - ஜூலை 1 முதல் புதிய திட்டம் அறிமுகம்!
அரசு பணியாளர்களின் கவனத்திற்கு – ஜூலை 1 முதல் புதிய திட்டம் அறிமுகம்!

மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலனுக்காக கேரள அரசாங்கம் MEDISEP என்ற புதிய காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டமானது நாளை (ஜூலை 1) முதல் அமலுக்கு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

காப்பீட்டு திட்டம்

இதுவரை இல்லாத வகையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை (MEDISEP) கேரள சுகாதாரத்துறை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த திட்டம் அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு குறிப்பிடத்தக்க நிவாரணம் அளிக்கிறது. இத்திட்டத்தின் கீழ் பயனாளிக்கு ஆண்டுதோறும் ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டமானது ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக அரசு ஊழியர்களின் ஜூன் மாத சம்பளம் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களின் ஜூலை மாத கொடுப்பனவுகளுடன் தொடங்கும் மாதாந்திர பிரீமியமாக ரூ.500 கழிக்கப்படும் என்று அரசாங்கம் தெளிவுபடுத்தி இருக்கிறது.

Exams Daily Mobile App Download

இந்த காப்பீட்டு திட்டத்தில் தாலுகா மருத்துவமனை அந்தஸ்து அல்லது அதற்கு மேல் உள்ள 200க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் சேர்க்கப்பட இருக்கிறது. அதாவது, MEDISEP திட்டம் கிட்டத்தட்ட 1,920 மருத்துவ நடைமுறைகளை உள்ளடக்கியதாகும். இது குறித்து ஆலப்புழா ஆரம்ப சுகாதார நிலையத்தின் ஜூனியர் சர்ஜன் ஷரத்குமார் கூறுகையில், ‘கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் போராடி வரும் அரசுத்துறையில் உள்ள மருத்துவப் பயிற்சியாளர்களுக்கு நிவாரணமாகவும், ஓய்வூதியத் திட்டத்திற்கான அரசாங்க அதிகாரிகளின் நீண்டகால கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாகவும் இந்த திட்டம் அமைக்கப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனா – நான்காம் அலையாக மாறும் ஆபத்து! 18,000 பேர் பாதிப்பு!

இதற்கிடையில் அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் நடைமுறை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள விபத்துக்கள் அல்லது பிற மருத்துவ அவசரநிலைகளுக்கு எம்பேனல் இல்லாத மருத்துவமனைகளில் செய்தாலும் கூட இந்த காப்பீட்டு பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் அங்கீகரிக்கப்பட்ட கட்டணங்கள் அல்லது தொகுப்பின் அடிப்படையில் பயனாளியின் சிகிச்சை செலவுகள் திருப்பி செலுத்தப்படும். அந்த வகையில் பயனாளிகளிடமிருந்து ரூ.6,000 பிடித்தம் செய்யப்பட்டாலும் MEDISEPஐ செயல்படுத்த டெண்டரை வழங்கிய ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ.4,800 (பிளஸ் ஜிஎஸ்டி) மட்டுமே அரசாங்கம் செலுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!