சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு – மதிப்புமிக்க 3 வீரர்கள் இவர்கள் தான்?

0
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு - மதிப்புமிக்க 3 வீரர்கள் இவர்கள் தான்?
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு - மதிப்புமிக்க 3 வீரர்கள் இவர்கள் தான்?
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு – மதிப்புமிக்க 3 வீரர்கள் இவர்கள் தான்?

நடந்து முடிந்த IPL 2022 சீசனில் ஏகப்பட்ட தோல்விகளை தழுவிய பிறகு, 2023 சீசனுக்காக தயாராகி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியில் மதிப்புமிக்க 3 வீரர்கள் மீண்டும் இடம்பிடிக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் 2021 சீசனில் சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி ஒரு அலட்சியமான சீசனை சந்தித்தது. அந்த வகையில் சமீபத்தில் முடிவடைந்த 15வது இந்தியன் பிரீமியர் லீக் சீசனில் நடப்பு சாம்பியன்கள் வெறும் நான்கு வெற்றிகள் மற்றும் 10 தோல்விகளுடன் புள்ளிகள் பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்து மோசமாக வெளியேறினர். இந்த சீசன் முழுவதும் சென்னை அணியில் ஏகப்பட்ட மாற்றங்கள் காணப்பட்டது. குறிப்பாக இந்த சீசன் தொடங்குவதற்கு முன்னதாக கேப்டனாக நியமிக்கப்பட்ட ரவீந்திர ஜடேஜா, பாதியிலேயே தலைமை பொறுப்பில் இருந்து விலகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்.

Exams Daily Mobile App Download

தொடர்ந்து CSK அணியை மீண்டும் பழைய நிலைக்கு புதுப்பிக்க MS தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டார். இருப்பினும், தோனியின் தலைமையின் கீழ் அவர்களால் மூன்று வெற்றிகளை மட்டுமே பெற முடிந்தது. அதற்குள் IPL 2022 சீசன் முடிவுக்கு வந்தது. இதற்கிடையில் சென்னை அணி ரசிகர்களுக்கு ஒரேயொரு நல்ல செய்தியாக அமைந்தது ஐபிஎல் 2023 சீசனில் தோனி பங்கேற்பதை உறுதிப்படுத்தியது தான். இப்போது, ஏகப்பட்ட தோல்விக்கு பின்னாக அடுத்த சீசனில் இன்னும் வலிமையாக சென்னை அணி களமிறங்க வேண்டும் என்றால் கடந்த சீசனில் காணப்பட்ட மூன்று மதிப்புமிக்க வீரர்களை CSK நிர்வாகம் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Accenture நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – இன்றே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

இந்த பட்டியலில் முதலவாதாக இடம்பிடித்திருப்பவர் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சவுத்ரி. இவர் கடந்த சீசனில் சென்னை அணிக்காக 16 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். இதில் 11 விக்கெட்டுகள் பவர்பிளேயில் வந்தது. இவர் ஒவ்வொரு போட்டியின் தொடக்கத்திலும் கணிசமான வேகத்துடன் பந்துவீசி ஸ்விங் செய்ய வைத்தார். மேலும், இந்த ஆண்டு தீபக் சாஹருக்கு பதிலாக சிறந்த தேர்வாக அமைந்த முகேஷ் சவுத்ரி அடுத்த சீசனில் அணியின் மற்ற வேகப்பந்து வீச்சாளருடன் ஜோடி சேர வாய்ப்புள்ளது. சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரரான டெவோன் கான்வே இந்த சீசனில் 7 அரைசதங்கள் உட்பட ஏழு ஆட்டங்களில் 250 ரன்களுக்கு மேல் அடித்ததன் மூலம் தனது இருப்பை உறுதிபடுத்தி இருக்கிறார்.

அவர் பேட்டிங் வரிசையில் சென்னை அணிக்காக ருதுராஜ் கெய்க்வாட்டுடன் இணைந்து நல்ல தொடக்கத்தை வழங்கினார். இதனால் டெவோன் கான்வே அடுத்த ஆண்டிலும் சென்னை அணியின் ஒரு முக்கியமான உறுப்பினராக இருப்பார். அடுத்ததாக ருதுராஜ் கெய்க்வாட் கடந்த சீசனின் தொடக்கத்தில் குறைந்த ஸ்கோரைப் பெற்றிருந்தாலும், 14 ஆட்டங்களில் விளையாடி 368 ரன்களை எடுத்துள்ளார். தவிர தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய டி20 அணியிலும் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் சென்னை அணி அவருக்கு நிரந்தர இடத்தை வழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!