TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு 2022 – சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?

0
TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு 2022 - சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு 2022 - சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு 2022 – சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?

தமிழகத்தில் உள்ள தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் மூலம் அறிவிக்கப்பட்ட இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்வு குறித்த முழு விவரத்தையும் கீழே முழுமையாக பார்ப்போம்.

TNTET:

தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று மிகவும் பரவி இருந்தது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப் பட்டது. அதனை தொடர்ந்து சென்ற பொதுத் தேர்வுகள் இல்லாமல் போனது. அதனால் மாணவர்களும் பொதுத் தேர்வுகள் இல்லாமல் கல்லூரிகளுக்கு சென்று விட்டனர். அதனை தொடர்ந்து, சென்ற ஆண்டு இறுதியில் கொரோனா பரவல் குறைந்த காரணத்தால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதனால் பள்ளிகள், மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டது. மேலும் தமிழக அரசின் சார்பில் வேலைவாய்ப்புகளும் அறிவிக்கப்பட்டது. அதாவது, TNPSC குரூப் 4, குரூப் 2, TET ஆகிய தேர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேதியை சமீபத்தில் வெளியிட்டது தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம். இது பிளஸ் 12 மற்றும் பி. எட் படித்து முடித்த மாணவ மாணவிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பாக குறைந்தபட்சம் 18 வயது முடிந்து இருக்க வேண்டும். ஆனால் அதிகபட்ச வயது வரம்பு தேவையில்லை என்றும் தெரிவித்து உள்ளது.  இதற்கு விண்ணப்பிக்க கட்டணமாக பொதுப்பிரிவினர், எம்பிசி , பி சி பிரிவினருக்கு ரூ 500 என்றும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ 250 என்றும் தெரிவித்து உள்ளனர். இந்த தேர்வுகள் தாள் 1 ஜூன் 27 ஆம் தேதி அன்று, தாள் 2 ஜூன் 28 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க முறையாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.trb.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்து கொள்ளலாம் என்றும் ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

சீனாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா தொற்று – அமலாகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்?

மேலும் அதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 13 ஆம் தேதி என்றும் அறிவித்து இருந்தனர். ஆனால் கடைசி தேதி அன்று இணையதள பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக நிறைய நபர்கள் இந்த தேர்வுக்கு பதிவு செய்ய முடியாமல் போனது. அதனால் பலரும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதியை நீடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தனர். அதன் பின்னர், மீண்டும் ஒரு வார காலம் கால அவகாசம் நீட்டிப்பு செய்தனர். இந்த நிலையில் தற்போது அதற்கான சிலபஸ் வெளியாகி உள்ளது. அதில் பேப்பர் 1 மற்றும் பேப்பர் 2 என்று இரு தாள்கள் வெளியிடப்பட்டு உள்ளது. மேலும் இதனை டவுன்லோட் செய்வது குறித்து கீழே பார்ப்போம். முதலில், http://www.trb.tn.nic.in/  என்ற இணையதளத்துக்கு சொல்லவும். அடுத்து தனியாக வரும் விண்டோவில், டீட்டைல்டு சிலபஸ் பேப்பர் 1 மற்றும் பேப்பர் 2 என்று ஆப்ஷன் இருக்கும். இது இரண்டையும் கிளிக் செய்து சிலபஸை டவுன்லோட் செய்துகொள்ளலாம். மேலும் அதனை தொடர்ந்து, பேப்பர் 1 என்பதை கிளிக் செய்யும் போது சிலபஸ் பிடிஎஃப் பைல் ஓப்பன் ஆகும். இதை நீங்கள் டவுன்லோட் செய்து வைத்துக்கொள்ளலாம். அது போலவே பேப்பர் 2 டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!