வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – கடன் வட்டி & EMI உயர்வு? RBI முக்கிய முடிவு!

0
வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - கடன் வட்டி & EMI உயர்வு? RBI முக்கிய முடிவு!
வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - கடன் வட்டி & EMI உயர்வு? RBI முக்கிய முடிவு!
வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – கடன் வட்டி & EMI உயர்வு? RBI முக்கிய முடிவு!

சமீபத்தில் அமெரிக்கா ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், நடப்பு நிதியாண்டில் இந்திய ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதங்கள் மற்றும் EMI ஆகியவற்றை உயர்த்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

வட்டி விகிதங்கள்

கடந்த 2 ஆண்டுகளாக நிலவி வரும் கொரோனா பேரலைத்தொற்று காரணமாக உலக நாடுகள் பலவும், பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வரும் நிலையில் இந்தியாவிலும் இதன் தாக்கம் கணிசமாக உயர்ந்திருக்கிறது. கொரோனா நிமித்தம் விதிக்கப்பட்ட ஊரடங்கு காலங்களில் உற்பத்தி, ஏற்றுமதி அனைத்தும் பாதிக்கப்பட்டதால் உலகளவிலான வணிகம், தொழில்துறை நிறுவனங்கள் ஆகியவை கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வந்தது. அதே போல அனைத்து வங்கி நிறுவனங்களும் வட்டி விகிதங்களை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிக் கல்வித்துறை விளக்கம்!

ஆனால் இப்போது கொரோனா நோய்த் தாக்கம் குறைந்திருந்தாலும், உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட சில நடவடிக்கைகளால் பணவீக்கம் மோசமடைந்துள்ளது. இதனால் உணவுப் பொருட்கள், உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்கள், பல சரக்குகள், கச்சா எண்ணெய், எரிவாயு, பெட்ரோல், டீசல் ஆகியவை கடுமையான விலை உயர்வை கண்டுள்ளது. இதனால் பணவீக்கம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்தும் முடிவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதாவது கடந்த மாதம் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் கூட்டத்தில் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு பின் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது. அமெரிக்க ரிசர்வ் வங்கியின் வட்டி உயர்வு, பணவீக்கத்தின் அழுத்தத்தை உறுதிப்படுத்தும் வகையில் இருப்பதாக கருதப்பட்டது. அதே சமயத்தில் அமெரிக்க ரிசர்வ் வங்கியின் அடுத்த கூட்டத்திலும் வட்டி உயர்வு ஏற்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இப்போது, அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டால் மற்ற நாடுகளிலும் இதன் தாக்கம் இருக்கும் என தெரிகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து விலகிய விஜே தீபிகாவிற்கு ஏற்பட்ட சோகம் – ரசிகர்கள் ஷாக்!

இந்த சூழலில் புதிய நிதியாண்டு தற்போது துவங்கி இருக்கும் நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) கொள்கை கூட்டம் ஏப்ரல் 6 முதல் 8ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் வட்டி விகிதம் உயருமா என்ற பலத்த எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. இதற்கிடையில் ரிசர்வ் வங்கியின் கடந்த கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதம் மாற்றப்படாத நிலையில், இம்முறையும் மாற்றம் இருக்காது என பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். தற்போது வரை ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதம் 4% ஆக இருக்கும் நிலையில் ஒருவேளை உயர்வு அறிவிக்கப்பட்டால் வட்டி விகிதம், EMI தொகை ஆகியவை உயர்வதற்கு வாய்ப்புள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!