வங்கி கணக்கு வைத்திருப்போரின் கவனத்திற்கு – இது தெரியலைனா சிரமம் உங்களுக்கு தான்!

0
வங்கி கணக்கு வைத்திருப்போரின் கவனத்திற்கு - இது தெரியலைனா சிரமம் உங்களுக்கு தான்!
வங்கி கணக்கு வைத்திருப்போரின் கவனத்திற்கு - இது தெரியலைனா சிரமம் உங்களுக்கு தான்!
வங்கி கணக்கு வைத்திருப்போரின் கவனத்திற்கு – இது தெரியலைனா சிரமம் உங்களுக்கு தான்!

ஒருவர் தற்போது ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்துள்ளனர். இதனால் என்னென்ன பலன்கள் உள்ளன? என்னென்ன சிக்கல்கள் உள்ளன? என்பது குறித்து விரிவாக இப்பதிவில் பார்ப்போம். இதனை ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள் கட்டாயமாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

வங்கி கணக்கு

ஒருவர் சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு என பல வகைகளுக்காக வங்கி கணக்குகளை வைத்துள்ளனர். இதனால் இவர்களுக்கு ஒரே சமயத்தில் பலன்கள் கிடைப்பதுடன் அதே சமயம் நஷ்டமும் கிடைக்கிறது. அதாவது ஒரு வங்கிகளில் சில சேவைகள் இலவசமாகவும் மற்றும் சில சேவைகள் கட்டணம் வசூலிப்பது மூலமாகவும் பெற முடிகிறது. அதனால் சில சேவை கட்டணத்திற்கு வங்கிகள் தாங்களாகவே உங்களின் சேமிப்பு பணத்தில் இருந்து கட்டணத்தை பிடித்தம் செய்கிறது. இதனால் நீங்கள் நீண்ட நாட்களாக பயன்படுத்தாத வங்கி கணக்கிலும் பணம் பிடித்தம் செய்யப்படும்.

திருப்பூரில் நாளை (செப். 22) “இந்த” பகுதிகளில் பவர் கட் – மின்வாரியம் அறிவிப்பு!

அதனால் உங்களின் சேமிப்பு பணம் தான் காலியாகும். ஆதலால் நீங்கள் நீண்ட நாட்களாக பயன்படுத்தாத வங்கி கணக்கை காலி செய்து விட வேண்டும். இதனால் உங்களின் சிறிய சேமிப்பு பணத்தை இழப்பதை தவிர்க்க முடியும். இதையடுத்து தற்போது சில வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை கட்டாயமாக்கியுள்ளன. இவ்வாறு நீங்கள் குறைந்தபட்ச இருப்பு தொகையை வைத்திருக்கவில்லையெனில் இதற்கு அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் இருப்பு தொகையை வைத்திருக்க வேண்டியது சற்று கடினமாகும்.

Exams Daily Mobile App Download
https://www.youtube.com/watch?v=vTYDk2UXwXo

அதனால் உங்களுக்கு தேவையில்லாத வங்கி கணக்கை இப்போதே காலி செய்து விடுங்கள். அத்துடன் எந்த வங்கிகளில் குறைந்த அளவு இருப்பு தொகை உள்ளதோ அந்த வங்கிகளில் புதிய கணக்கை தொடங்க வேண்டும். இதனை தொடர்ந்து உங்களுக்கு சில சமயங்களில் பணத் தேவை ஏற்படும் அந்த சமயங்களில் ATM கார்டு மூலமாக சுலபமாக பணத்தை எடுக்கலாம். இதில் நாள் ஒன்றுக்கு குறைந்த அளவு பணத்தை மட்டுமே எடுக்க முடியும் என்பதால் அந்த சூழ்நிலையில் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்துக் கொள்வது உகந்ததாக இருக்கும். உங்களின் தேவையை பொறுத்து ஒன்று மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்துக் கொள்வது தொடர்பாக முடிவு எடுத்துக் கொள்ளுங்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!