ATM கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – தவறாமல் படிங்க!

0
ATM கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு - தவறாமல் படிங்க!
ATM கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு - தவறாமல் படிங்க!
ATM கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – தவறாமல் படிங்க!

இந்தியாவில் உள்ள அனைத்து ஏடிஎம்களிலும் இனிமேல் ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதி வர இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதனால் மக்கள் இனி கவலை இன்றி வெளியே செல்லும் போது ATM கார்டு இல்லாமல் பயணிக்கலாம்.

ரிசர்வ் வங்கி:

இந்தியாவில் கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று இருந்த காரணத்தால் பெரும் பொருளாதார அழிவு ஏற்பட துவங்கியது. மேலும் அந்த நேரத்தில் பொது மக்களுக்கு பெரிதும் பயனாக இருந்தது இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளின் ATM கள் மட்டும் தான். மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக கொரோனா காலகட்டத்தில் அனைத்து வங்கிகளும் மூடி இருந்த நேரத்திலும் ATM கள் செயலில் இருந்து வந்தது.

TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!

ஆனாலும் அதிலும் ஒரு சிக்கல் இருந்தது. அது என்னவென்றால், நிறைய நபர்கள் அவரசமாக பணம் எடுக்க சென்று இருப்பார்கள். ஆனால் ATM கார்டை வீட்டில் மறந்து விட்டு சென்று விடுவார். அதனால் ரிசர்வ் வங்கி சார்பில் இதுபோன்ற பிரச்சனைகளை தீர்க்க ஏடிஎம் கார்டு இல்லாமலேயே பணம் எடுக்கும் வசதியை அனைத்து வங்கிகளுக்கும் கொண்டு வர உள்ளது. இந்த நிலையில் ATM கார்டு இல்லாமல் பணம் பெற இரு வழிகள் உள்ளன. அவை என்னவென்று கீழே முழுமையாக பார்ப்போம்.

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DR) தவணைத்தொகை – 7வது ஊதியக்குழு முக்கிய தகவல்!

முதலில், ஏடிஎம் மெஷினில் வாடிக்கையாளரின் வங்கி கணக்கு மொபைல் நம்பர் போன்ற விவரங்களை பதிவிட்ட உடன் மெஷினில் QR code உருவாக்கப்படும். அதன் பின்னர் நீங்கள் உபயோகப்படுத்தும் UPI ஆப் மூலமாக ஸ்கேன் செய்து பணம் எடுக்கலாம். இல்லை என்றால், இரண்டாவது முறையாக, உங்களுடைய UPI ஐடி மற்றும் தொகையை மெஷினில் பதிவிட்டு மொபைல் மூலமாக பணம் அனுப்பி அதை எடுக்கலாம் என்றும் ரிசர்வ் வங்கி தரப்பில் இருந்து கூறியுள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!