UGC NET 2022 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – அட்மிட் கார்டு வெளியீடு!

0
UGC NET 2022 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு - அட்மிட் கார்டு வெளியீடு!
UGC NET 2022 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு - அட்மிட் கார்டு வெளியீடு!
UGC NET 2022 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – அட்மிட் கார்டு வெளியீடு!

இந்தியாவில் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் தகுதிக்கான UGC NET தேர்வு வருகிற 29ம் தேதி அன்று பல்கலைக்கழக மானியக் குழுவால் நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில் இத்தேர்வுக்கான அட்மிட் கார்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அட்மிட் கார்டு

இந்தியா முழுவதும் UGC NET தேர்வுகளின் தேதிகளை கடந்த சில நாட்களுக்கு முன்பாக பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டது. இத்தேர்வில் தேர்ச்சி பெறுவது மூலமாக இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணியாற்றலாம். அத்துடன் இத்தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலமாக கிடைக்கும் சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் என்பதால் இத்தேர்வுக்கு இந்தியா முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர்.

Exams Daily Mobile App Download

இதே போல் இத்தேர்வு மூலமாக உயர்கல்வி துறைகளில் ஆய்வு மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் ஜேஆர்எஃப் எனப்படும் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகைக்கான சான்றிதழையும் பெறுகின்றனர். ஆனால் இதற்கான ஆயுள் காலம் 3 ஆண்டுகள் மட்டுமே ஆகும். இத்தேர்வு 2 தாள்களாக நடத்தப்படுகிறது. இதன் முதல் தாளில் பொது அறிவு பாடப்பகுதியில் இருந்து 50 வினாக்கள் கேட்கப்படும். இந்த தேர்வு எழுத 1 மணி நேரம் கால அவகாசம் வழங்கப்படும். இதையடுத்து 2ம் தாளில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்துள்ள பாடம் சார்ந்து 100 வினாக்கள் கேட்கப்படும்.

தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 73 லட்சம் பேர் பதிவு – முழு விவரம் வெளியீடு!

இத்தேர்வுக்கு 2 மணி நேரம் கால அவகாசம் வழங்கப்படும்.  இதையடுத்து தற்போது UGC-NET டிசம்பர் 2021 மற்றும் ஜூன் 2022 (Merged Cycles) Phase II தேர்வுக்கான அட்மிட் கார்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  அத்துடன் இதனை https://ugcnet.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ள நினைப்பவர்கள்  011-40759000 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!