அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – ஆதார் கார்டை இணைப்பது எப்படி? முழு விபரம் இதோ!

0
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - ஆதார் கார்டை இணைப்பது எப்படி? முழு விபரம் இதோ!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - ஆதார் கார்டை இணைப்பது எப்படி? முழு விபரம் இதோ!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – ஆதார் கார்டை இணைப்பது எப்படி? முழு விபரம் இதோ!

இந்தியாவில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் குறைந்த விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் ரேஷன் கார்டு மூலமாக செயல்படுத்தப்படுகிறது. அதனால் ரேஷன் கார்டில் உள்ள விவரங்கள் சரியானதாக இருக்க வேண்டும். தற்போது ரேஷன் கார்டில் ஆதார் எண்ணை எப்படி ஆன்லைன் மூலமாக இணைக்கலாம் என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

ஆதார் இணைப்பு:

இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் மலிவான விலையில் ரேஷன் பொருட்கள் ரேஷன் கார்டு மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் ரேஷன் கார்டு மூலமாக செயல்படுத்தப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இத்திட்டத்தின் கீழ் எங்கு, யார் வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை பெற முடியும். அதனால் ரேஷன் கார்டில் உள்ள விவரங்கள் அனைத்தும் சரியானதாக இருக்க வேண்டும்.

அத்துடன் நீங்கள் மொபைல் எண்ணை மாற்றியிருந்தால் உடனடியாக அதனை உங்கள் ரேஷன் கார்டில் அப்டேட் செய்ய வேண்டும். மேலும் தற்போது ரேஷன் கார்டில் ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து இதற்கான கால அவகாசம் முடிவடைந்துள்ள நிலையில் கால அவகாசத்தை வருகிற ஜூன் 30ம் தேதி வரை நீட்டித்துள்ளது. ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை ஆன்லைன் வாயிலாக சுலபமாக இணைக்கலாம். இதனை ரேஷன் கார்டுதார்கள் மேற்கொள்ளவில்லையெனில் ரேஷன் பொருட்களை பெறுவதில் பிரச்சனைகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

Exams Daily Mobile App Download
இணைப்பதற்கான வழிமுறைகள்:

1. முதலில் uidai.gov.in என்ற UIDAIயின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

2. இதையடுத்து ‘ஸ்டார்ட் நவ்’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

3. இதில் உங்களின் முகவரி, மாவட்டம், மாநிலம் உள்ளிட்ட தகவல்களை நிரப்ப வேண்டும்.

4. அதன் பின்னர் ‘ரேஷன் கார்டு பெனிபிட்’ என்பதை கிளிக் செய்து இதில் ஆதார் அட்டை எண், ரேஷன் கார்டு எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் உள்ளிட்டவைகளை நிரப்ப வேண்டும்.

5. அடுத்ததாக அனைத்து தகவல்களையும் கொடுத்த பிறகு தங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும்.

6. இதையடுத்து OTP எண்ணை உள்ளிட வேண்டும். இறுதியாக உங்கள் ஆதார் சரிபார்க்கப்பட்டு உங்கள் ரேஷன் கார்டுடன் ஆதார் இணைக்கப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!