அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – கார்டுகளை ரத்து செய்வதாக அரசு எச்சரிக்கை!

0
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - கார்டுகளை ரத்து செய்வதாக அரசு எச்சரிக்கை!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - கார்டுகளை ரத்து செய்வதாக அரசு எச்சரிக்கை!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – கார்டுகளை ரத்து செய்வதாக அரசு எச்சரிக்கை!

மத்திய அரசின் இலவச ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்தில், தகுதியில்லாத நபர்கள் ரேஷன் பொருட்களை பெறுவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதிய விதிகள்

நாடு முழுவதும் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்காக அரசு சில சிறப்பு விதிகளை உருவாக்கியுள்ளது. இதில் எந்தெந்த நபர்கள் ரேஷன் கார்டுக்கு தகுதியானவர்கள், யார் தகுதியற்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, கொரோனா தொற்றுநோய்களின் போது ஏழைகளுக்கு அரிசி, கோதுமை, உளுந்து உள்ளிட்ட இலவச ரேஷன் பொருட்களை வழங்கும் முறையை அரசாங்கம் தொடங்கியது. இருப்பினும், கடந்த காலங்களில் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான தகுதியற்ற குடும்ப அட்டைதாரர்கள் இலவச ரேஷனைப் பயன்படுத்திக் கொள்வது அரசின் கவனத்துக்கு வந்தது.

Exams Daily Mobile App Download

அதனால் அப்படி செய்பவர்களின் ரேஷன் கார்டை ரத்து செய்ய வேண்டும் என்று அரசு தரப்பில் இருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தகுதியில்லாமல் ரேஷன் பொருட்களை பெற்று வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது. இப்போது அரசின் அறிவுறுத்தலை மீறி, ரேஷன் பொருட்களை பெற்றால் சரிபார்ப்புக்குப் பிறகு உணவுத் துறை குழு அதை ரத்து செய்யும் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் 60 காலிப்பணியிடங்கள் – மாதம் 90,000 வரை ஊதியம்!

இப்போது ரேஷன் கார்டு தொடர்பான புதிய விதியின்படி, ரேஷன் கார்டுதாரர் தனது சொந்த வருமானத்தில் சம்பாதித்த 100 சதுர மீட்டர் பரப்பளவில் ப்ளாட் அல்லது வீடு, நான்கு சக்கர வாகனம், டிராக்டர், ஆயுத உரிமம், கிராமத்தில் இரண்டு லட்சத்துக்கு மேல் குடும்ப வருமானம் மற்றும் நகரத்தில் மூன்று லட்சம் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் தங்களின் ரேஷன் கார்டை தாலுகா அல்லது DSO அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இல்லையெனில் அவர்களின் கார்டு ரத்து செய்யப்படுவதுடன், சட்டப்பூர்வமாக நடவடிக்கையும் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!