அனைத்து ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு – சூப்பரான சேமிப்பு திட்டம்! முழு விவரம் இதோ!

0
அனைத்து ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு - சூப்பரான சேமிப்பு திட்டம்! முழு விவரம் இதோ!
அனைத்து ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு - சூப்பரான சேமிப்பு திட்டம்! முழு விவரம் இதோ!
அனைத்து ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு – சூப்பரான சேமிப்பு திட்டம்! முழு விவரம் இதோ!

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்கள் உள்ளது. இதில் ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பரான சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இணைவதற்கான முழு விவரங்கள் குறித்து பார்ப்போம்.

சேமிப்பு திட்டம்

ஒரு நபரின் ஓய்வுக்கு பிறகு அவரின் வருமானம் தடைப்பட்டு செலவுகள் அதிகரிக்க தொடங்கி விடும். அதனால் இளமை காலத்தில் முதுமை காலத்திற்கான சேமிப்பை தொடங்க வேண்டும். அதன்படி இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமானது அதிக வருமானம் உள்ளவர்கள், நடுத்தர வர்க்கம், குறைந்த வருமானம் உள்ளவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் முதுமை காலத்தில் பேருதவியாக இருக்க சரல் பென்ஷன் யோஜனா திட்டம் தான் உகந்ததாக இருக்கும. இதில் முதலீடு செய்தால் முதுமை காலத்தில் நீங்கள் யாருடைய உதவியின்றி வாழலாம்.

தமிழகத்தில் முதல் கட்ட பொறியியல் கலந்தாய்வு – அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

இதனை தொடர்ந்து இத்திட்டத்தில் இணைவதற்கு குறைந்தபட்சமாக 40 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அத்துடன் அதிகபட்சமாக 80 வயது வரை இருக்கலாம். இத்திட்டத்தில் ஒருமுறை முதலீடு செய்தால் போதும் மாதந்தோறும் ஓய்வூதிய பலன்களை பெறலாம். அத்துடன் இத்திட்டத்தில் ஓய்வூதிய பலன்களை பெற மற்ற சேமிப்பு திட்டத்தை போல 60 வயது வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதாவது 40 வயதிலே உங்களுக்கு இத்திட்டத்தில் ஓய்வூதிய பலன்கள் கிடைக்கிறது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 வரை வழங்கப்படும்.

Exams Daily Mobile App Download

மேலும் இதில் வாழ்நாள் முதலீட்டு விருப்பம், ஜாயின்ட் லைஃப் லாஸ்ட் சர்வைவர் ஆன்யூட்டி விருப்பம் என முதலீடு செய்ய 2 வழிகள் உள்ளது. இதன் முதல் விருப்பத்தில் பாலிசிதாரர் இறந்து விட்டால் அவரின் வருடாந்திர கார்பஸ் நிறுத்தப்படும். அத்துடன் இவரின் சேமிப்பு தொகை முழுவதும் நாமினிக்கு வழங்கப்படும். ஆனால் 2வது விருப்பத்தில் பாலிசிதாரர் இறந்தால் வாழ்க்கைத் துணைக்கு வருடாந்திர பணம் தொடர்ந்து வழங்கப்படும். இதில் வாழ்க்கைத்துணையும் இறந்து விடுகிறார் எனில் முதலீடு தொகை முழுவதும் நாமினிக்கு வழங்கப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here