அனைத்து அலுவலக ஊழியர்களின் கவனத்திற்கு – ஊதியம் குறித்த மத்திய அரசின் உத்தரவு!

0
அனைத்து அலுவலக ஊழியர்களின் கவனத்திற்கு - ஊதியம் குறித்த மத்திய அரசின் உத்தரவு!
அனைத்து அலுவலக ஊழியர்களின் கவனத்திற்கு - ஊதியம் குறித்த மத்திய அரசின் உத்தரவு!
அனைத்து அலுவலக ஊழியர்களின் கவனத்திற்கு – ஊதியம் குறித்த மத்திய அரசின் உத்தரவு!

தற்போது புதிய தொழிலாளர் குறியீடு கொள்கைப்படி, பணியில் இருந்து ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் உள்ளிட்ட இதர பணப்பலன்களை அடுத்த 2 நாட்களுக்கு வழங்க வேண்டும் என்று நிறுவனங்களுக்கு மத்திய அரசாங்கம் அறிவுறுத்தி இருக்கிறது.

புதிய மாற்றம்

தொழிலாளர் நலன் தொடர்பான புதிய கொள்கைப்படி, பணியில் இருந்து ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் உள்ளிட்ட இதர பணப்பலன்களை அடுத்த 2 நாட்களுக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது. அதாவது, மத்திய அரசு அறிவித்திருந்த தொழிலாளர்களுக்கான புதிய ஊதியக்கொள்கையில் இன்று (ஜூலை 1) முதல் ஏகப்பட்ட மாற்றங்கள் ஏற்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கொள்கையின் மூலம், அரசு ஊழியர்களுக்கான வேலை நேரம், ஊதியம், PF பங்களிப்பு, விடுமுறை ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட இருக்கிறது.

Exams Daily Mobile App Download

இதற்காக ஊழியர்களின் பணி சூழல், தொழிலாளர் நலம், ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டங்கள் அமலுக்கு வரும் பட்சத்தில் இந்தியா முழுவதும் உள்ள பெரும்பாலான ஊழியர்கள் அதிகளவு நன்மையை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஊதியக்கொள்கையின் படி, ஊழியர்கள் இனி ஊழியர்கள் வாரத்தில் 5 நாட்களுக்கு பதிலாக 4 நாட்கள் வேலைமுறையை தேர்வு செய்ய முடியும். ஆனால், ஊழியர்களின் வேலை நேரம் என்பது இந்த முறையில் சற்று வித்தியாசப்படும்.

SBI வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி விடுமுறை நாட்களிலும் வங்கிச் சேவைகள்!

அதாவது, ஒரு வாரத்தில் 4 நாட்களுக்கு அலுவலக வேலை முறையை தேர்வு செய்யும் ஊழியர்கள் ஒவ்வொரு நாளும் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். இந்த முறையில் 3 நாட்கள் வார இறுதி விடுமுறை கிடைக்கும். இது தவிர PF பங்களிப்புக்கு ஊழியர்கள் செலுத்தும் தொகையும் இந்த புதிய ஊதியக்கொள்கையின் மூலம் மாற்றமடைய இருக்கிறது. அந்த வகையில் நிகர ஊதியத்தில் 50% அளவுக்கான அடிப்படை ஊதியம் இருக்க வேண்டும்.

இதனால் PF திட்டத்திற்கு ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் அளிக்கும் பங்களிப்பு அதிகரிக்கப்படும். மேலும் ஊழியர்கள் வீடுகளுக்கு எடுத்துச்செல்லும் சம்பளமும் குறையும். ஆனால், ஊழியர்கள் ஓய்வு பெறும் போது கிடைக்கும் தொகை அதிகமாக இருக்கும். அந்த வகையில் இந்த புதிய ஊதியக்கொள்கையின் வேலை முறையில் பணிபுரியும் ஊழியர்கள் ஓய்வு பெற்றவுடன் அவர்களின் ஊதியம் உள்ளிட்ட இதர பணப்பலன்களை அடுத்த 2 நாட்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here