அனைத்து வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – 14 நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு!

0
அனைத்து வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - 14 நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு!
அனைத்து வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - 14 நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு!
அனைத்து வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – 14 நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு!

நாளை (ஜூலை 1) முதல் துவங்க இருக்கும் ஜூலை மாதத்தில் கிட்டத்தட்ட 14 நாட்கள் வரை அனைத்து பொது மற்றும் தனியார் துறை வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.

விடுமுறை அறிவிப்பு

அடுத்ததாக வரவிருக்கும் ஜூலை மாதத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் உட்பட 14 நாட்கள் இந்தியாவில் உள்ள வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள விடுமுறை பட்டியலின்படி, இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் வார இறுதி நாட்களைத் தவிர எட்டு நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட இருக்கிறது. அதாவது, வெவ்வேறு விடுமுறைகள் காரணமாக பல்வேறு மாநிலங்கள் அல்லது நகரங்களில் குறிப்பிட்ட சில நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

Exams Daily Mobile App Download

இந்திய ரிசர்வ் வங்கி, விடுமுறை நாட்களை மூன்று பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தியுள்ளது. அந்த வகையில் பேச்சுவார்த்தைக்குட்பட்ட கருவிகள் சட்டத்தின் கீழ் அடுத்த மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றபடி, அடுத்த மாதத்தில் மாநிலங்களுக்கான சிறப்பு விடுமுறைகள் சிலவும் இடம்பெற்றுள்ளது. அதனால் வங்கி தொடர்பான பணிகளை திட்டமிடும்போது, வாடிக்கையாளர்கள் அந்தந்த மாநிலங்களுக்கான வங்கி விடுமுறை தேதியைச் சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தமிழகத்தில் ஜூலை 2ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

வங்கி விடுமுறை:

ஜூலை 1 – காங் (ரதஜாத்ரா)/ரத யாத்திரை (புவனேஸ்வர், இம்பால்)
ஜூலை 7 – கர்ச்சி பூஜை (அகர்தலா)
ஜூலை 9 – ஈத்-உல்-அஜா (பக்ரித்) (கொச்சி, திருவனந்தபுரம்)
ஜூலை 11 – ஈத்-உல்-அஜா (ஜம்மு மற்றும் ஸ்ரீநகர்)
ஜூலை 13 – பானு ஜெயந்தி (காங்டாக்)
ஜூலை 14 – பெஹ் டியென்க்லாம் (ஷில்லாங்)
ஜூலை 16 – ஹரேலா (டேராடூன்)
ஜூலை 26 – கேர் பூஜை (அகர்தலா)

வார இறுதி விடுமுறைகள்:

ஜூலை 3 – ஞாயிறு
ஜூலை 10 – ஞாயிறு
ஜூலை 17 – ஞாயிறு
ஜூலை 23 – நான்காவது சனிக்கிழமை
ஜூலை 24 – ஞாயிறு
ஜூலை 31 – ஞாயிறு

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!