Airtel, Vi & Reliance Jio வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – சிறந்த நெட்வொர்க் எவை? ஒரு முழு அலசல்!

0
Airtel, Vi & Reliance Jio வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - சிறந்த நெட்வொர்க் எவை? ஒரு முழு அலசல்!
Airtel, Vi & Reliance Jio வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - சிறந்த நெட்வொர்க் எவை? ஒரு முழு அலசல்!
Airtel, Vi & Reliance Jio வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – சிறந்த நெட்வொர்க் எவை? ஒரு முழு அலசல்!

ஏர்டெல் மற்றும் ஜியோவின் நெட்வொர்க்குகள் இரண்டும் விஐ ன் 4G நெட்வொர்க்கை விட உயரமான பகுதிகளில் சிறப்பாக செயல்படுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது. இவை மூன்று நிறுவங்களை பொறுத்த வரையில் தனது வாடிக்கையாளர்களுக்கு எவை சிறப்பான சலுகைகளை வழங்குகின்றது என்பதை இந்த பதிவில் காணலாம்.

சிறந்த நிறுவனங்கள்:

இந்தியாவில் தற்போது ஏர்டெல், ஜியோமற்றும் விஐ ஆகிய மூன்று தனியார் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிக சலுகைகளை வழங்க தீவிரமாகச் செயல்படுகின்றனர். இதனால் மிகவும் மலிவு விலையில் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அவை அனைத்தும் தற்போது மெல்ல மெல்ல நீக்கப்படுகிறது. அதாவது மிகவும் மலிவு விலையில் யார் வழங்குகிறார்கள் என்பதை விட சிறந்த சேவைகளை யார் வழங்குகிறார்கள் என்று வாடிக்கையாளர்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டனர்.

Exams Daily Mobile App Download

ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவின் ப்ரீபெய்ட் திட்டங்கள் தற்போது இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு சிறந்தவையாக உள்ளது. ஏர்டெல் மற்றும் ஜியோவின் நெட்வொர்க்குகள் Vi இன் 4G நெட்வொர்க்கை விட உயரமான பகுதிகளில் சிறப்பாக செயல்படுவதாக Opensignal ஆய்வுகள் தெரிவித்துள்ளது. ஆனால் பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றும் வேகத்தில் Vi மட்டுமே முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் வீடியோ, கேம், வாய்ஸ் ரெகார்டிங் ஆப்ஸ், நெட்வொர்க் நிலையாக இருக்கும் தன்மை, மற்றும் தரம் போன்ற பிற விஷயங்களும் கவனிக்க வேண்டிய விஷயங்களாக உள்ளது.

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு – ஜூன் 2 முதல் விடைத்தாள் திருத்தம்!

டிசம்பர் 1, 2021 முதல் பிப்ரவரி 28, 2022 வரை இந்திய சந்தையில் இருந்து Opensignal ஆய்வு மையம் டேட்டாவை சோதிக்க தொடங்கியது. இந்த காலகட்டத்தில், அதிகபட்ச சராசரி பதிவிறக்கம் மற்றும் பதிவேற்ற வேகத்தை வழங்குவதில் Vi நெட்வொர்க் சிறந்ததாக இருப்பதாக Opensignal தீர்மானித்தது. ஆனால் மற்ற துறைகளில் விஐ நிறுவனம் பின்தங்கி உள்ளது. வீடியோ, கேம், வாய்ஸ் ரெகார்டிங் ஆப்ஸ், போன்ற விஷயங்களில் ஏர்டெல் சிறந்ததாக இருந்தது. 4G கவரேஜ், சிறந்த நிலையான தரம் போன்றவைகளில் ஜியோ முன்னணியில் உள்ளது.

Vi இன் நெட்வொர்க்குகள் நல்ல வேகத்தை வழங்குவதற்கு முக்கிய காரணமாக இருப்பது ஜியோ மற்றும் ஏர்டெல் உடன் ஒப்பிடும்போது அதன் நெட்வொர்க்குகளில் குறைவான பயனர்கள் இருப்பது தான் ஆகும். Vi க்கு 118 மில்லியன் 4G பயனர்கள் மட்டுமே உள்ளனர். அதே நேரத்தில் Jio மற்றும் Airtel ஆகியவை தங்கள் நெட்வொர்க்கில் அதிக 4G வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளன. Vi இன் ப்ரீபெய்ட் திட்டங்களில் சிறந்த சலுகைகள் உள்ளன. ஆனால் வாடிக்கையாளர் சிறப்பான அனுபவத்தை பெறுவது இல்லை. இதனால் தான் Vi குறைவான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!