ஆதார் கார்டு பயன்படுத்துவோர் கவனத்திற்கு – புகைப்படம் மாற்றுவதற்கான வழிமுறைகள்!

0
ஆதார் கார்டு பயன்படுத்துவோர் கவனத்திற்கு - புகைப்படம் மாற்றுவதற்கான வழிமுறைகள்!
ஆதார் கார்டு பயன்படுத்துவோர் கவனத்திற்கு - புகைப்படம் மாற்றுவதற்கான வழிமுறைகள்!
ஆதார் கார்டு பயன்படுத்துவோர் கவனத்திற்கு – புகைப்படம் மாற்றுவதற்கான வழிமுறைகள்!

ஆதார் கார்டில் உள்ள அனைத்து விவரங்களையும் அப்டேட்டாக வைத்திருக்க வேண்டியது அவசியம். எனவே, ஆதார் கார்டில் தேவையான மாற்றங்களை செய்யும் வசதியை ஆதார் அமைப்பு வழங்குகிறது. அந்த வகையில் தற்போது ஆதரில் புகைப்படம் மாற்றும் வழிகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

புகைப்படம் மாற்றுதல்:

இந்தியாவில் ஆதார் அட்டை முக்கிய ஆவணமாக விளங்குகிறது. மேலும், பிறந்த குழந்தை முதல் அனைவருக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், இன்றைய காலகட்டத்தில் ஆதார் எண் இல்லாமல் தண்ணீர் கூட வாங்க முடியாத நிலை வந்துள்ளது. இத்தகைய பயன்பாடு உடைய ஆதாரை நாம் எப்போதும் அப்டேட்டாக வைத்திருப்பது அவசியமாகும். அந்த வகையில் ஆதாரில் புகைப்படம் மாற்றுதல், முகவரி மாற்றுதல், தொலைபேசி எண் மாற்றுதல் போன்ற சிறப்பு அம்சங்களை UIDAI வழங்குகிறது. அதன்படி ஆதார் அட்டைதாரர்கள் ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே ஆதாரில் தேவையான மாற்றங்களை செய்யலாம்.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் ஏராளமானோர் ஆதாரில் புகைப்படத்தை மாற்ற வேண்டும் என்று நினைக்கின்றனர். தங்களின் தற்போதைய புகைப்படத்தை வைக்க நினைக்கின்றனர். ஆனால் நிறைய பேருக்கு ஆதாரில் புகைப்படத்தை எவ்வாறு மாற்றுவது பற்றி தெரியாது. இது அவர்களுக்கான பதிவு தான். அதன்படி, ஆதாரில் புகைப்படத்தை மாற்ற முதலில்  https://uidai.gov.in/my-aadhaar/get-aadhaar.html என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து அதற்கான உரிய விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

ஜூலை 8 முதல் அடுத்த 4 நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு – பண்டிகை எதிரொலி!

தற்பொழுது, அதில் கேட்கப்படும் தகவல்களை நிரப்பி அருகே உள்ள ஆதார் மையத்தில் சமர்ப்பிக்கவும். மேலும், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களையும் சான்றாக அளிக்க வேண்டும். பிறகு புகைப்படம் மற்றும் பயோமெட்ரிக் தகவல்களை வழங்க வேண்டும். இந்த வேலைகளை நீங்கள் முடித்த பிறகு உங்களுக்கு ரசீது வழங்கப்படும். அப்போது நீங்கள் ஆதார் அட்டையில் புகைப்படத்தை மாற்ற ரூ.25 மட்டுமே செலுத்த வேண்டும். அதனைத் தொடர்ந்து 2 வாரங்களுக்குப் பிறகு ஆதாரில் உள்ள உங்கள் புகைப்படம் புதுப்பிக்கப்பட்டு புதிய ஆதார் அட்டை உங்களின் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு வரும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!