இந்தியாவில் ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – புதுப்பிப்பதற்கான வழிமுறைகள் இதோ!

0
இந்தியாவில் ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு - புதுப்பிப்பதற்கான வழிமுறைகள் இதோ!
இந்தியாவில் ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு - புதுப்பிப்பதற்கான வழிமுறைகள் இதோ!
இந்தியாவில் ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – புதுப்பிப்பதற்கான வழிமுறைகள் இதோ!

இந்தியாவில் ஆதார் கார்டு வைத்து இருப்பவர்கள் கவனத்திற்கு அவரவர் மொழிகளிலேயே இனிமேல் புதுப்பித்து கொள்ளலாம் என்று அறிவித்து உள்ளனர். அதற்கான வழிமுறைகளை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

ஆதார் கார்டு:

இந்திய நாட்டை பொறுத்த வகையில் ஆதார் கார்டு மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாக மாறிவிட்டது. நாட்டில் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ள அடையாள சான்றுகளில் ஒன்றாக ஆதார் கார்டு வந்து விட்டது. ஒரு புதிய பேங்க் அக்கவுண்ட் ஓபன் செய்ய, புதிய சிம் கார்டை வாங்குதவற்கும் அல்லது கோவிட்-19 தடுப்பூசி மற்றும் பரிசோதனைகளை செய்ய என இந்திய குடிமக்கள் தங்கள் ஆதார் அட்டையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் ரேஷன் கார்டில் பெயர் சேர்ப்பதற்கு, புதிதாக பிறந்த குழந்தையின் பெயரை சேர்க்கவும் ஆதார் கார்டு மட்டுமே பயன்படுகிறது.

ExamsDaily Mobile App Download

இந்த நிலையில் ஆதார் கார்டில் அப்டேட் செய்து தற்போது புதிதாக பரவி வருகிறது. மேலும் போன் நம்பரை மாற்றுவது, அதில் உள்ள போட்டோவை மாற்றுவது மற்றும் வீட்டின் முகவரியை மாற்றுவது போன்ற செயல்களை செய்யலாம் என்றும் கூறி இருந்தனர். இந்த புதுப்பித்தல் பணியை இனிமேல் அவரவர் மொழிகளில் செய்து கொள்ளலாம் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.

NHM தமிழ்நாடு வேலைவாய்ப்பு – 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

 

ஆதார் அட்டையில் ஏதேனும் தவறுகள் இருந்தால், நீங்கள் அதை புதுப்பிக்க விரும்பினால், ஆதார் அட்டை வழங்கும் அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளமான UIDAI https://uidai.gov.in/ஐ கிளிக் செய்யவும். இந்த இணையதளத்தில் கிளிக் செய்தவுடன், ஆதார் சேவை பிரிவு அப்டேட் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். ஆதாரின் 12 இலக்க தனிப்பட்ட எண் கேட்கப்படும். அதை நிரப்பவும், அடுத்து நீங்கள் கேப்ட்சா குறியீட்டை நிரப்ப வேண்டும். அடுத்து உங்களிடம் சில விவரங்கள் கேட்கப்படும். உடனடியாக அவற்றை நிரப்பவும். அதன் பிறகு உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும், அதை நிரப்ப வேண்டும். அடுத்த அப்டேட் டேட்டா பட்டனை கிளிக் செய்ய வேண்டும். அதன் பின்னர் தங்கள் மொழியை தேர்வு செய்து தொடர்ந்து தங்களின் புதுப்பித்தல் பணியை ஆரம்பிக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!