ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – போட்டோவை மாற்ற புதிய வழிமுறைகள் இதோ!

0
ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு - போட்டோவை மாற்ற புதிய வழிமுறைகள் இதோ!
ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு - போட்டோவை மாற்ற புதிய வழிமுறைகள் இதோ!ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு - போட்டோவை மாற்ற புதிய வழிமுறைகள் இதோ!
ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – போட்டோவை மாற்ற புதிய வழிமுறைகள் இதோ!

இந்தியாவில் உள்ள மக்கள் அனைவருக்கும் ஆதார் கார்டில் உங்கள் புகைப்படத்தை மாற்ற அருமையான ஒரு வழியை இந்த தொகுப்பில் விரிவாக பார்ப்போம். எனவே ஆதார் கார்டில் உள்ள போட்டோ பிடிக்காதவர்கள் உடனே இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ஆதார் கார்டு:

நமது நாட்டில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் ஆதார் கார்டு தற்போது மிக முக்கிய ஆவணமாக மாறி விட்டது. மேலும், வருமான வரி, வங்கி சேவை, இன்சூரன்ஸ் சேவை மற்றும் சிலிண்டர் வாங்குவது வரையில் அனைத்திற்கும் ஆதார் கார்டு முக்கியமானதாக மாறிவிட்டது. இதனால் ஆதார் கார்டு இல்லாமல் தனிநபரை உறுதி செய்யும் எந்த செயலையும் செய்ய முடியாது என்று தெரிகிறது. மேலும், புதிதாக பிறந்த குழந்தையின் பெயரை சேர்க்கவும் ஆதார் கார்டு வைத்து மட்டுமே செய்ய முடியும் என்ற நிலைக்கு வந்து விட்டனர்.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் ஆதார் கார்டில் இருக்கும் புகைப்படம் பலருக்கும் பிடிக்காமல் இருக்கும். நம் புகைப்படம் எடுத்த நேரத்தில் அந்த கூட்டத்தில் நின்று கசங்கி போய் வியர்வை வழிய புகைப்படத்தை எடுத்திருப்போம். அதுவும் அப்பொழுது இருந்த வெப்கேமில் புகைப்படத் தெளிவும் அந்த அளவிற்கு இருக்காது. மேலும் சிலர் ஆதார் கார்டு எடுத்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகி இருக்கும். எனவே உங்களது அப்போதைய தோற்றத்திற்கும், தற்போதைய தோற்றத்திற்கும் நிறைய மாறுபாடுகள் தோன்றும். அதனால் அந்த புகைப்படத்தை மாற்றி கொள்ளலாம் என்று அரசு அறிவித்து உள்ளது.

கிழிந்த ரூபாய் நோட்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – RBI சூப்பர் அறிவிப்பு! முழு விபரம் இதோ!

ஆதார் அட்டை புகைப்படத்தை மாற்றுவது குறித்த தொகுப்பு, முதலில் UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://uidai.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்குச் செல்ல வேண்டும். ஆதார் பதிவு படிவத்தைப் பதிவிறக்கவும். தேவையான அனைத்து விவரங்களையும் படிவத்தில் சமர்ப்பிக்கவும்.பின்னர் ஆதார் பதிவு மையத்திற்கு சென்று படிவத்தை சமர்ப்பிக்கவும். உங்கள் புதிய படத்தை இங்கே எடுத்து, தங்களின் ஆதார் கார்டில் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதற்கு கட்டணமாக ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ.100 செலுத்த வேண்டும்.இதற்குப் பிறகு, நீங்கள் ஒப்புகை சீட்டு மற்றும் புதுப்பிப்பு கோரிக்கை எண் பெறுவீர்கள். இந்த URN மூலம் உங்கள் ஆதார் அட்டையின் புதுப்பிப்பை நீங்கள் கண்காணிக்கலாம். இந்த புதுப்பிப்பு 90 நாட்கள் வரை ஆகலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதார் அட்டையில் உங்கள் புகைப்படத்தை மாற்றும் போது அதற்கான புகைப்படம் எடுக்க ஆதார் பதிவு மையத்திற்கு செல்ல வேண்டும். உங்கள் ஆதார் அட்டையில் சிறந்த புகைப்படத்தை பெற விரும்பினால், நீங்கள் நன்கு தயாராக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here