ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – இதை தெரிந்து கொள்வது கட்டாயம்!

0
ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு - இதை தெரிந்து கொள்வது கட்டாயம்!
ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு - இதை தெரிந்து கொள்வது கட்டாயம்!
ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – இதை தெரிந்து கொள்வது கட்டாயம்!

இன்றைய காலகட்டத்தில், ஆதார் கார்டு அனைத்து அரசு சேவைகள், சலுகை திட்டங்கள் பெறுவதற்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக மாறியுள்ளது. இந்நிலையில் இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் எண் தவறாக பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே அதை எப்படி சரி பார்ப்பது என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

ஆதார் கார்டு:

நம் நாட்டில் ஆதார் அட்டை என்பது இன்றியமையாத ஆவணம். வங்கியில் கணக்கு தொடங்குவது முதல் சிம் கார்டு எடுப்பது வரை அனைத்து வேலைகளுக்கும் ஆதார் அவசியமாக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆதார் தவறானவர்களின் கைகளுக்குச் சென்றால், அது தவறாகப் பயன்படுத்தப்படும் வாய்ப்பும் உள்ளது. உங்கள் ஆதார் எண் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக நீங்கள் சந்தேகித்தால், இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (யுஐடிஏஐ) அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று உங்கள் வீட்டிலிருந்து ஆன்லைனில் அதைச் சரிபார்க்கலாம். இதற்கு உங்களிடம் கட்டணம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது.

தமிழக தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஆதார் தவறாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை சரிபார்ப்பது எப்படி:

 • முதலில், நீங்கள் ஆதார் இணையதளம் அல்லது uidai.gov.in/ என்ற இந்த இணைப்புக்குச் செல்ல வேண்டும்.
 • இங்கே Aadhaar Services என்பதன் கீழே Aadhaar Authentication History என்ற விருப்பத்தைக் காணலாம், அதைக் கிளிக் செய்யவும்.
 • இங்கு நீங்கள் ஆதார் எண் மற்றும் பாதுகாப்பு குறியீட்டை பார்த்தவாறு உள்ளிட்டு Send OTP என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
 • இதற்குப் பிறகு ஆதாருடன் இணைக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு (RMN) OTP அனுப்பப்படும், இந்த OTP ஐ உள்ளிட்டு submit என்பதை கிளிக் செய்யவும்.
Exams Daily Mobile App Download
 • இதற்குப் பிறகு, அங்கீகார வகை, தேதி வரம்பு மற்றும் OTP உட்பட கேட்கப்படும் அனைத்து தகவல்களையும் நீங்கள் நிரப்ப வேண்டும்.
 • Verify OTP என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், உங்கள் முன் ஒரு பட்டியல் தோன்றும், அதில் கடந்த 6 மாதங்களில் ஆதார் எப்போது, எங்கு பயன்படுத்தப்பட்டது என்பது பற்றிய தகவல்கள் வழங்கப்படும்.
 • தகவல்களை பார்க்கும்போது, ஆதார் அட்டை தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகம் இருந்தால், உடனடியாக புகார் அளிக்கலாம்.
 • 1947 என்ற கட்டணமில்லா எண்ணை அழைப்பதன் மூலம் புகாரைப் பதிவு செய்யலாம் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் அல்லது https://resident.uidai.gov.in/file-complaint இணைப்பில் ஆன்லைனில் புகார் செய்யலாம்.
 • இதனிடையே இறந்த நபரின் ஆதாரை ரத்து செய்ய எந்த ஏற்பாடும் இல்லை
 • ஒருவர் இறந்த பிறகு ஆதார் அட்டையை ரத்து செய்யும் முறை இல்லை. இதுபோன்ற சூழ்நிலையில், இறந்தவரின் ஆதார் அட்டையை பராமரித்து, அது தவறாகப் பயன்படுத்தப்படாமல் பார்த்துக் கொள்வது இறந்தவரின் குடும்பத்தினரின் பொறுப்பாகும்.
 • இறந்த நபர், ஆதார் மூலம் ஏதேனும் திட்டம் அல்லது மானியத்தின் மூலம் பயனடைந்தால், அந்த நபர் இறந்தது குறித்து சம்பந்தப்பட்ட துறைக்கு தெரிவிக்க வேண்டும். இது அந்த திட்டத்தில் இருந்து அவரது பெயர் நீக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here