ஆதார் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – மொபைல் எண்ணை இணைக்கும் வழிகள் இதோ!

0
ஆதார் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - மொபைல் எண்ணை இணைக்கும் வழிகள் இதோ!
ஆதார் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - மொபைல் எண்ணை இணைக்கும் வழிகள் இதோ!
ஆதார் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – மொபைல் எண்ணை இணைக்கும் வழிகள் இதோ!

இந்தியாவில் முக்கிய ஆவணமாக விளங்கும் ஆதார் அட்டையுடன் மொபைல் எண்ணை இணைக்க வேண்டும். இந்த வேலையை செய்ய அரசு மக்களுக்கு தேவையான கால அவகாசத்தையும் வழங்கியது. தற்போது ஆன்லைன் வாயிலாக மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைக்கும் வழிகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

மொபைல் எண் – ஆதார் இணைப்பு:

இந்தியாவில் ஆதார் அட்டை ஒவ்வொரு குடிமக்களின் அடையாளமாக உள்ளது. இந்த ஆதார் வங்கி பண பரிவர்த்தனைகள், கேஸ் இணைப்பு பெற, ஓட்டுநர் உரிமம் பெற அரசின் சலுகைகள் பெற போன்றவற்றிற்கு அவசியமாகிறது. இந்த நிலையில் ஆதார் எண்ணை பான் கார்டு, மொபைல் எண், வங்கி கணக்கு ஆகியவற்றுடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஆதாரை மொபைல் எண்ணுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தகைய பயன்பாடு உடைய ஆதாரை நாம் எப்போதும் அப்டேட்டாக வைத்திருப்பது அவசியமாகும். தற்போது ஆதாரில் புகைப்படம் மாற்றுதல், முகவரி மாற்றுதல், தொலைபேசி எண் மாற்றுதல் போன்ற சிறப்பு அம்சங்களை UIDAI வழங்குகிறது.

Exams Daily Mobile App Download

நாம் ஆன்லைன் வாயிலாகவும், அஞ்சல் நிலையம் மற்றும் ஆதார் சேவை மையங்கள் வாயிலாகவும் ஆதாரில் அப்டேட் செய்யலாம். இத்தகைய விவரங்களை மாற்ற நாம் ஆதார் அட்டையுடன் மொபைல் எண்ணை இணைக்க வேண்டும். ஆதார் அட்டையுடன் மொபைல் எண் இணைக்கப்பட்டிருந்தால், பல வேலைகளை எளிதாக செய்யலாம். உங்கள் மொபைல் எண் ஆதாருடன் இணைக்கபடவில்லை என்றால் நீங்கள் ஆதாரில் அப்டேட் செய்ய முடியாது. ஆதாருடன் மொபைல் நம்பரை இணைக்க விரும்புபவர்கள் முதலில் ஆன்லைன் வாயிலாக படிவத்தை பெற்று அதனை பூர்த்தி செய்ய வேண்டும்.

  • முதலில்  https://uidai.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதில் பதிவு செய்து, ஆதார் சேவா கேந்திராவில் அப்பாயின்மெண்டை வாங்க வேண்டும்.
  • இந்த அப்பாயின்மென்ட் தேதியை நீங்கள் உங்கள் வசதியை பொறுத்து தேர்வு செய்யலாம்.
  • தார் சேவா கேந்திராவைப் பார்வையிட்ட பிறகு, உங்கள் மொபைல் எண்ணைப் புதுப்பிக்க ஆதார் திருத்தப் படிவத்தை நிரப்ப வேண்டும்.
  • இந்தப் படிவத்தில் உங்கள் பெயர், ஆதார் எண் மற்றும் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட வேண்டிய மொபைல் எண் ஆகியவற்றை நீங்கள் தெளிவாக நிரப்ப வேண்டும்.
  • பின்னர் இந்த படிவத்தை ஆதார் சேவை மையத்தில் உள்ள அலுவலரிடம் கொடுத்து புதிய மொபைல் எண்ணை மாற்றலாம்.

    TNPSC Online Classes

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!