ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – இனி வரிசையில் நிற்க தேவையில்லை! புதிய வசதி!

0
ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு - இனி வரிசையில் நிற்க தேவையில்லை! புதிய வசதி!
ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு - இனி வரிசையில் நிற்க தேவையில்லை! புதிய வசதி!
ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – இனி வரிசையில் நிற்க தேவையில்லை! புதிய வசதி!

நாட்டின் முக்கிய ஆவணமான, ஆதார் அப்டேட்களுக்கு இனி வீட்டில் உட்கார்ந்து ஒரு அப்பாயிண்ட்மெண்டை பதிவு செய்யலாம். ஆன்லைன் மூலமாக இவ்வாறு புக்கிங் செய்தால் வரிசையில் காத்திருப்பதையும் வீண் அலைச்சலையும் தவிர்க்கலாம். எனவே அப்பாயிண்ட்மெண்டை ஆன்லைனில் எப்படி பதிவு செய்யலாம் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஆதார் அப்டேட் செய்ய புதிய வசதி:

இந்தியாவில் ஆதார் அட்டை முக்கிய முதல் ஆவணமாக உள்ளது. மேலும் ஆதார் அட்டை வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல், பல அரசு மற்றும் அரசு சாரா சலுகைகளைப் பெற கட்டாய ஆவணமாகவும் உள்ளது. ஆதார் அட்டை ஒரு தனித்துவமான ஆவணமாகும். ஏனெனில் அதில் தேவையான தகவல்கள் அனைத்தும் இருக்கும். மேலும் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது முதல், அரசாங்க படிவங்களை நிரப்புவது வரை, அனைத்து இடங்களிலும் ஆதார் அட்டை பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையை, அப்டேடுடன் வைத்திருப்பது கட்டாயம் ஆகும்.

நீங்களும் ஆகலாம் தமிழக அரசு ஊழியராக? அரிய வாய்ப்பு! தகவல் உள்ளே!

எனவே அதில் உள்ள திருத்தங்களை உடனடியாக செய்துவிட வேண்டும். மேலும் ஆதாரில் அப்டேட் செய்வதற்கு எங்கும் அலையாமல், ஆன்லைன் மூலமாக அப்டேட் செய்யலாம். ஆனால் சில அப்டேட்களை ஆதார் சேவை மையத்திற்கு சென்று தான் செய்ய முடியும். அதில் பலருக்கு சிரமம் இருக்கும். ஏனெனில் குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் அப்டேட் செய்கிறார்கள். எனவே அதற்கு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிச் செல்லலாம். தற்போது ஆன்லைன் மூலமாகவே அப்பாயிண்ட்மெண்ட் புக்கிங் செய்ய முடியும். அது மிகவும் எளிமையான காரியம் ஆகும்.

அப்பாயிண்ட்மெண்ட் புக்கிங் செய்ய எளிய வழிமுறைகள்:
  • முதலில்  https://uidai.gov.in என்ற வெப்சைட்டில் செல்ல வேண்டும்.
  • உள்ளே சென்றதும் ‘my aadhaar’ என்பதை கிளிக் செய்து ‘Book an appointment’ என்ற வசதியை தேர்ந்தெடுக்கவும்.
  • அடுத்ததாக உங்கள் நகரம் மற்றும் இருப்பிடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • சந்திப்பை பதிவு செய்ய ’proceed’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • மொபைல் எண்ணைப் பதிவிட்டு ‘New aadhaar’ அல்லது ‘aadhar update’ பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
  • அடுத்ததாக கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு, ’Generate OTP’ என்பதை கிளிக் செய்யவும்.
  • மொபைல் நம்பருக்கு வரும் OTP நம்பரைப் பதிவிட்டு ‘verify’ என்பதை கிளிக் செய்யவும்.
  • ஆவணங்களுடன் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் முகவரி விவரங்களை உள்ளிட வேண்டும்.
  • எந்த நாள் – எந்த நேரம் என்பதைத் தேர்ந்தெடுத்து ’next’ என்பதை கிளிக் செய்தால் அப்பாயிண்ட்மெண்ட் புக் ஆகிவிடும். அந்த தேதியில் சென்று ஆதாரில் அப்டேட் செய்யலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!