1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஜூலை 25 வரை விடுமுறை! மாநில அரசு திடீர் உத்தரவு!

0
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - ஜூலை 25 வரை விடுமுறை! மாநில அரசு திடீர் உத்தரவு!
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - ஜூலை 25 வரை விடுமுறை! மாநில அரசு திடீர் உத்தரவு!
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஜூலை 25 வரை விடுமுறை! மாநில அரசு திடீர் உத்தரவு!

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அசாம், மேகாலயா மாநிலங்களில் ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்நிலையில் அசாம் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக அனைத்து வகை பள்ளிகளுக்கும் ஜூலை 25 வரை கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

மாநில அரசு திடீர் உத்தரவு:

அசாம் மாநிலத்தில் கடந்த ஜூன் 13-ம் தேதி முதல் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அசாமில் பிரம்மபுத்திரா மற்றும் பராக் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து, கிட்டத்தட்ட 32 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி, பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 55 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தகவல் வெளியாகியிருந்தது. மழை, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ளவர்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டு வருகிறார்கள். அவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Exams Daily Mobile App Download

வெள்ளப்பெருக்கால் மாநிலத்தில் உள்ள பல பள்ளிகள் நிவாரண முகாம்களாக செயல்பட்டு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் அளித்து வருகின்றன. மேலும் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறக்கும் தேதியானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதாவது அசாமில் வெள்ளப்பெருக்கு காரணமாக அனைத்து வகை பள்ளிகளுக்கும் ஜூலை 25 வரை கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அசாம் அரசு அறிக்கை வெளியிட்டு உள்ளது.

CBSE 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

அதில், இடைநிலைக் கல்வித் துறை, அசாம் அரசின் அனைத்து தொடக்க, மேல்நிலை, மூத்த மேல்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் கோடை விடுமுறையை ஜூன் 25 முதல் ஜூலை 25 வரை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறையானது 5 நாள்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டு உள்ளது , அதாவது அசாமில் பள்ளிகளுக்கு ஜூலை 1 முதல் ஜூலை 31 வரை கோடை விடுமுறை அறிவித்திருந்த நிலையில், தற்போது ஜூன் 25 முதல் ஜூலை 25 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கௌஹாத்தி பல்கலைக்கழகம் நடத்தும் சில தேர்வுகள் மற்றும் உதவி ஆய்வாளர் ஆட்சேர்ப்பு இயக்கத்திற்கான உடற்தகுதி தேர்வு உள்பட பல தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்றும் அசாம் அரசு தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here