தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – புதிய கல்வி ஆண்டுக்கான அட்டவணை வெளியீடு!

0
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - புதிய கல்வி ஆண்டுக்கான அட்டவணை வெளியீடு!
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - புதிய கல்வி ஆண்டுக்கான அட்டவணை வெளியீடு!
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – புதிய கல்வி ஆண்டுக்கான அட்டவணை வெளியீடு!

தமிழகத்தில், முன்னதாக ஜூன் 13 ஆம் தேதி திறப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த பள்ளிகள், ஜூன் இறுதி வாரத்தில் திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் வரும் கல்வியாண்டுக்கான தேர்வு தேதி அறிவிப்புகளையும், பள்ளிகள் திறப்பு, வரும் ஆண்டில் எத்தனை நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை குறித்தும் நேற்று முன்தினம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அட்டவணை வெளியீடு:

தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பிப்ரவரி1 ஆம் தேதி முதல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடப்பு வருடம் கட்டாயம் நடைபெறும் என கல்வித்துறை உறுதி அளித்தது. இதன்பேரில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது.

Exams Daily Mobile App Download

இதற்கிடையில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஐந்தாம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை இறுதி ஆண்டு தேர்வுகள் நடத்தப்பட்டன. இதையடுத்து 14 ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதைஅடுத்து பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்று மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில் நேற்று முன் தினம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசிய போது, 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் மாதம் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு மே 31ம் தேதி முக்கிய அறிவிப்பு – விரைவில் அகவிலைப்படி (DA) 4% உயர்வு!

மேலும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் மாதம் 27 ஆம் தேதியும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் மாதம் 20 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்துள்ளார். அதே போல் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 2023 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் மார்ச் மாதம் 13 ஆம் தேதி பொதுத் தேர்வு தொடங்கும்.

11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 14 ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 13 ஆம் தேதியும் பொதுத்தேர்வுகள் தொடங்கும். மேலும் வரும் கல்வியாண்டில் இருந்து வழக்கம் போல் பள்ளிகள் செயல்படத் தொடங்கும். இதை அடுத்து ஆசிரியர்களுக்கு 210 நாட்கள் வேலை நாட்கள், அரசு விடுமுறை, வார விடுமுறை ஆகியவற்றை சேர்த்து, 148 நாட்கள் விடுமுறை நாட்கள் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் 7 நாட்கள் இதர பணி நாட்களாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!