1 முதல் 10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிகள் திறப்பிற்கான முன்னேற்பாடுகள்!

0
1 முதல் 10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - பள்ளிகள் திறப்பிற்கான முன்னேற்பாடுகள்!
1 முதல் 10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - பள்ளிகள் திறப்பிற்கான முன்னேற்பாடுகள்!
1 முதல் 10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிகள் திறப்பிற்கான முன்னேற்பாடுகள்!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், பள்ளி வளாகங்களை, வகுப்புகளைச் சுத்தம் செய்ய வேண்டும் என திருப்பூர் மாவட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி அறிவுறுத்தியுள்ளார்.

பள்ளிகள் திறப்பு:

கொரோனா தொற்று குறைந்து மீண்டும் பள்ளிகள் பிப்ரவரி 1ம் தேதி முதல் தொடங்கப்பட்டது. இந்த வருடம் மாணவர்களுக்கு தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டதால் வழக்கத்துக்கு மாறாக ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படும் தேர்வுகள் மே மாதத்தில் நடத்தப்பட்டன. அந்த வகையில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இருந்து கோடை விடுமுறை முடிந்து ஜூன் 13ம் தேதி அதாவது நாளை மறுநாள் திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

PhonePe, Paytm மூலம் மொபைல் ரீசார்ஜ் செய்ய கூடுதல் கட்டணம் – பயனர்கள் புகார்! நிறுவனம் விளக்கம்!

இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த முன்னேற்பாடுகள் கூட்டம், கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி தலைமையில் திருப்பூர் கொங்கு மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. இதில் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 183 தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் அவர் கூறியது, மாணவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் பள்ளி வளாகங்களை சுத்தம் செய்ய வேண்டும் எனவும் வகுப்பறைகளை கிருமி நாசினி தெளித்து தூய்மையாக பராமரித்து கொள்ள வேண்டும்.

மேலும் மாணவர் மற்றும் ஆசிரியர் சார்ந்த தகவல்களை குறிப்பிடவும் , சேதமடைந்த பொருட்கள், கழிப்பிட வசதி, வகுப்பறைகள் உள்ளிட்ட தகவல்களை ‘எமிஸ்’ என்ற இணைய தளத்தில் பதிவிட வேண்டும் என கூறியிருக்கிறார். இனி வரும் காலங்களில் இதனடிப்படையில் மட்டுமே திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும், அதனால் பராமரிப்பில்லாத கட்டமைப்புகள் சீரமைக்க பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இந்த பட்டியலில் , கூடுதல் கழிப்பறை கட்டுதல், வகுப்பறை மேற்கூரைகள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் குறிப்பிடப்படும் என தெரிவித்திருக்கிறார். இதற்கான விவரங்களை தலைமையாசிரியர்கள் தெரிவிக்க வேண்டும் என அறிவித்திருக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here