
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வுத்துறையின் அதிர்ச்சி ரிப்போர்ட்!
தமிழகத்தில் இந்த ஆண்டு கட்டாயமான முறையில் பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியது. அதன்படி தற்போது 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவித்தபடி பொதுத்தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களின் விவரங்கள் குறித்து தேர்வுத்துறை அதிர்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
பொதுத்தேர்வு
தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் காரணமாக நடப்பு கல்வியாண்டு தாமதமாக தொடங்கப்பட்டது. மேலும் கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு கட்டாயமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டிருந்தது. நடப்பு ஆண்டில் குறைவான நாட்களே நேரடி வகுப்புகள் நடைபெற்றதால் பொதுத்தேர்வுக்குரிய பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டது. அத்துடன் பொதுத்தேர்வுக்குரிய வினாக்கள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் இருந்து தான் கேட்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.
Exams Daily Mobile App Download
அதன்படி இந்த ஆண்டுக்கான பொதுத்தேர்வு குறித்த கால அட்டவணையை வெளியிட்டது. இதில் தெரிவித்துள்ளதாவது, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 5ம் தேதி முதல் மே 28ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதே போல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை நடைபெறும் என்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6ம் தேதி முதல் மே 30ம் தேதி வரை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது அறிவித்தபடி 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.
கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு தேதியில் மாற்றம்? பல்கலைக்கழக அறிவிப்பு!
இந்த நிலையில் கொரோனா பரவல் மற்றும் தேர்வு குறித்த அச்சம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை என்று தேர்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதாவது தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 32,625 மாணவர்கள் வருகை தரவில்லை எனவும் இதில் 6 பாடங்களையும் 30,719 மாணவர்கள் எழுதவில்லை என்றும் தேர்வுத்துறை அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது.