தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – மாற்றுச் சான்றிதழில் திருத்தம் கூடாது!

0
தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - மாற்றுச் சான்றிதழில் திருத்தம் கூடாது!
தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - மாற்றுச் சான்றிதழில் திருத்தம் கூடாது!
தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – மாற்றுச் சான்றிதழில் திருத்தம் கூடாது!

தமிழகத்தில் 10ம் வகுப்பு மாற்றுச் சான்றிதழில் சாதியை குறிப்பிட்டு வழங்குவது நடைமுறையில் உள்ளது. அத்துடன் மாற்றுச் சான்றிதழில் ஜாதியை குறிப்பிடும் போது தவறுதலாக வேறு ஒரு சாதி பெயரை குறிப்பிட்டால் அதனை பின்னர் பள்ளி நிர்வாகத்தின் மூலமாக திருத்தி கொள்ளலாம். தற்போது இதனை பள்ளி நிர்வாகங்கள் மேற்கொள்ளக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பள்ளிகள் கவனத்திற்கு

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல செயல்படத் தொடங்கியுள்ளது. இதுவரை தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 40,000க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் 10000க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் இயங்குகின்றன. மேலும் அனைத்து மாணவர்களுக்கும் இடஒதுக்கீடு அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருவதால் மாற்றுச்சான்றிதழில் மாணவர்களின் சாதியை கட்டாயமாக குறிப்பிட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல் – பிரதமர் எடுக்கப்போகும் முடிவு என்ன?

இதனை தொடர்ந்து தற்போது அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களால் மாற்று சான்றிதழில் சாதி பெயரை குறிப்பிட வேண்டும் என்று கூறப்பட்டது. அதன்படி தற்போது அனைத்து பள்ளிகளிலும் இந்த முறை நடைமுறையில் உள்ளது. இதில் சில சமயங்களில் தவறுதலாக வேறு ஒரு ஜாதி பெயரை குறிப்பிட்டால் பள்ளி நிர்வாகவே மாற்றி தரப்படுவது வழக்கமாக உள்ளது. தற்போது இது குறித்து மாவட்ட பள்ளிக் கல்வித்துறை ஆணையர் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

தீவிரமடையும் கொரோனா, அமலாகும் ஊரடங்கு – மருத்துவ குழுவை அனுப்பிய சீன அரசு!

இந்த சுற்றறிக்கையில் கூறியதாவது, 10ம் வகுப்பு மாற்று சான்றிதழில் தவறுதலாக ஜாதி பெயர் இருந்தால் அதனை பள்ளி நிர்வாகங்கள் மாற்றி தரக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தங்களின் ஜாதி சான்றிதழில் குறிப்பிடப்பட்ட பெயரை மாற்று சான்றிதழில் திருத்தம் செய்யும் படி கோரிக்கை வைத்தாலும் ஏற்க வேண்டாம் என்றும் மாற்று சான்றிதழ் தேவைப்படும் சமயத்தில் வருவாய் துறையின் சாதி சான்றிதழையும் அதனுடன் இணைத்து பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இனி வரும் காலங்களில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் விபரங்களை சரியாக பள்ளி தலைமை ஆசிரியர்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!