தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு செயலி மூலம் வருகைப்பதிவு – ஆகஸ்ட் 1 முதல் தொடக்கம்!

1
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு செயலி மூலம் வருகைப்பதிவு - ஆகஸ்ட் 1 முதல் தொடக்கம்!
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு செயலி மூலம் வருகைப்பதிவு - ஆகஸ்ட் 1 முதல் தொடக்கம்!
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு செயலி மூலம் வருகைப்பதிவு – ஆகஸ்ட் 1 முதல் தொடக்கம்!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் செயலி மூலம் ஆசிரியர்களின் வருகைப் பதிவு செய்ய இருப்பதாக கல்வித்துறை அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு அறிவிப்பு:

தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் , கல்வித் தேர்ச்சி சதவீதத்தையும் அதிகரிக்கவும், மாணவர்களின் கற்றல் அடைவுத்திறனையும் அதிகரிப்பதற்கான பல முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில் மாணவர்களின் கல்வி இடைநிற்றலை தடுத்தல், விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வருதல், தாமதம் தவிர்த்தல் போன்றவற்றிற்கு தலைமை ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அது மட்டுமில்லாமல் ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்கள் அனைவரது வருகையையும், செல்போன் செயலி விரல் ரேகை பதிவு முறை மூலம் வருகைப்பதிவேடு பராமரிக்கும் நடைமுறை தற்போது முதன்முறையாக நடைமுறைக்கு வர இருக்கிறது. அதன் படி வருகிற ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ஆசிரியர்களின் வருகை செயலி மூலமாக பதிவு செய்யப்படும் என கல்வித்துறை அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு கல்வி ‘பெல்லோஷிப் ‘ திட்டம் – ஜூலை 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு!

ஆசிரியர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு சென்றதும் தங்களுடைய செல்போன் செயலியை ஆன் செய்து, விரல் ரேகையை பதிவுசெய்ய வேண்டும். அதில் எந்த இடத்தில் இருந்து எத்தனை மணிக்கு பதிவு செய்கிறார்கள் என்பது காட்டப்படும். அது குறித்த விவரமும் கல்வித்துறைக்கு சென்றடையும், விரல் ரேகை பதிவின்போது, இன்டர்நெட் சிக்னல் கிடைக்காவிட்டாலும் அதனால் எந்த பிரச்சனையும் வராது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் விளக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. Already EMIS not working as teacher community said.Now , developing various app for this. But, no app could beat the manual work as foreign countries says. None other than this work, server problem , Even, the remote areas, in both plains and hills this app never work

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here