உக்ரைன் அணுமின் நிலையத்தின் மீது தாக்குதல்?- ஐ.நா சபை வலியுறுத்தல்!
கடந்த 7 மாதங்களாக ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் தொடர்ந்து நடந்து வருகிறது. தற்போது ஜபோரிசியா அணுமின் நிலையம் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இந்த அணுமின் நிலையம் தாக்கப்பட்டால் மிக பெரிய பேரழிவு ஏற்படும் என்று அனைத்து நாடுகளும் அஞ்சுகின்றனர்.
அணுமின் நிலையம்:
சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த நாடுகளுள் ஒன்று உக்ரைன் அதனால் உக்ரைன் நேட்டாவில் உறுப்பு நாடுகளாக இணையக் கூடாது என்று ரஷ்யா உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து ரஷ்யா நோட்டாவில் இணைய முற்பட்டு வருகிறது. இதை தடுக்க ரஷ்யா தனது ராணுவ பலத்தால் உக்ரைனை முழுமையாக கைப்பற்ற தொடர்ந்து போர் நடத்தி வருகிறது. இரு நாடுகளுக்கிடையேயான போரில் ஏராளமானோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் தற்போது வரை நடைபெற்று வருகிறது. இந்த போரால் இரு நாட்டு பொது மக்களும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
அத்துடன் பொருளாதார சரிவும் ஏற்பட்டுள்ளது. அதனால் கச்சா எண்ணெய் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. தற்போது இந்த போரில் ஜபோரிசியா அணுமின் நிலையம் இலக்காகி உள்ளது. போரின் தொடக்கத்திலேயே ஜபோரிசியா அணுமின் நிலையம் ரஷ்யாவின் வசமாகிவிட்டது. இது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு அவையில் ஆலோசிக்கப்பட்டது. அப்போது தெற்கு உக்ரைனில் அமைந்துள்ள ஜேபரோஜையா அணுமின் நிலையத்தில் ஏவுகணைகள் தாக்குதல் நடப்பது ஆழ்ந்த கவலை அளிப்பதாக ஐ.நா. பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மெட்ரோ ரயில் கட்டணங்களில் மாற்றம் – நிர்வாகம் அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் அணுமின் நிலையத்தை சுற்றிலும் ராணுவ மற்ற பகுதியாக அறிவிக்குமாறு சர்வதேச அணுசக்தி முகமை கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் அணுமின் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தாக்குதல் நடத்த கூடாது என்று உக்ரைனை அறிவுறுத்துமாறு மேற்கு உலக நாடுகள் வலியுறுத்தி உள்ளது. தற்போது இரு நாடுகளுக்கும் இடையே சிக்கியுள்ள அணுமின் நிலையம் தாக்கபட்டால் அதனால் விளையும் பேரழிவு மிகவும் மோசமானதாக இருக்கும். அதனால் ரஷ்யாவும் உக்ரைனும் ராணுவ வீரர்களை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று ஐ.நா வலியுறுத்தி உள்ளது.