Post Office பண பரிவர்த்தனை, ATM கார்டுகளில் புதிய மாற்றங்கள் – பயனர்கள் கவனத்திற்கு!
அக்டோபர் 1 முதல் ஏடிஎம் கார்டு, பரிவர்த்தனை கட்டணத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தபால் துறையில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அறிவித்துள்ளது.
சேமிப்பு கணக்கு:
அஞ்சல் அலுவலகத்தில் மக்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு திட்டங்களை நடைமுறையில் உள்ளது. அதில் முக்கியமான ஒன்று அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு. தற்போது அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கில் அக்டோபர் 1 முதல் சில கட்டணத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தபால் துறை சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தபால் அலுவலக சேமிப்பு கணக்கு குறித்த புதிய கட்டண விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் அக்.31 வரை கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – மத்திய அரசு!
தபால் அலுவலக ஏடிஎம்/டெபிட் கார்டுகளுக்கு வருடாந்திர பராமரிப்பு கட்டணம் ரூ.125 + ஜிஎஸ்டி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணமானது 2021 , அக்டோபர் 1ம் தேதி முதல் 2022 செப்டம்பர் 30ம் தேதி வரை செல்லும் என கூறப்படுகிறது. மேலும் இந்தியா போஸ்ட் தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் எஸ்எம்எஸ் தகவல்களுக்கு இப்போது ரூ.12 + ஜிஎஸ்டி வசூலிக்கும் தபால் துறை சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
TN TRB போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு – தேர்வு செயல்முறை!
அதேபோல் இந்தியா போஸ்ட் வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கார்டை இழந்தாலோ அல்லது அவர்கள் புதிய கார்டு பெறுவதற்கு அக்டோபர் 1 முதல் அவர்களிடம் ரூ.300 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் ஏடிஎம் பின் எண் மறக்கும் பட்சத்தில் வேறு எண் வழங்க கட்டணம் வசூலிக்கப்படும். சேமிப்பு கணக்கில் இருப்பு இல்லாததால் ஏடிஎம் அல்லது பிஓஎஸ் பரிவர்த்தனைகள் நிராகரிக்கப்பட்டால், வாடிக்கையாளர் அதற்காக ரூ.20 மற்றும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.