முழு ஊரடங்கு ஜூன் 16 வரை நீட்டிப்பு – கடைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அசாம் மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் ஜூன் 6 ஆம் தேதி மதியம் 1 மணி முதல் ஜூன் 16 ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு
அசாம் மாநிலத்தில் கொரோனா பரவல் வீதமானது இன்னும் குறைந்து வராத பட்சத்தில் ஜூன் 6 ஆம் தேதிக்கு மேல் முழு ஊரடங்கை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் ஜூன் 6 ஆம் தேதி முதல் ஜூன் 16 ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பை விட கொரோனா பரவல் வீதமானது குறைந்திருந்தாலும், நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களுக்கு போதுமான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.
TN Job “FB
Group” Join Now
இது தவிர அசாமில் அறிவிக்கப்பட்டுள்ள பொது முடக்க காலத்தில் கடைகள் இயக்கத்திற்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. தவிர கடைகள் இயங்கும் நேரத்திற்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. மேலும் அரசு அனுமதித்துள்ள புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி உணவகங்கள் உள்ளிட்ட சில கூடுதல் செயல்பாடுகளுக்கும் தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் படி,
தமிழகத்தில் ஜூன் 14 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு? இன்று அறிவிப்பு!
- அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும் ஜூன் 15 வரை மூடப்பட்டிருக்கும்.
- அனைத்து வகையான கடைகளும், வணிக நிறுவனங்களும் அனைத்து நாட்களிலும் நண்பகல் 12 மணி வரை செயல்படும்.
- தினமும் பிற்பகல் 1 மணி முதல் அதிகாலை 5 மணி வரை தனிநபர்களின் நடமாட்டத்திற்கு தடை.
- அரசு உணவகங்கள், தாபாக்கள் மற்றும் பிற உணவகங்களை மதியம் 12 மணி வரை திறந்திருக்கலாம்.
- மேலும் பிற்பகல் 1 மணி வரை உணவுகளை வீட்டு விநியோகம் செய்வது உள்ளிட்ட பயணங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
- ஹோட்டல் அல்லது ரெசார்ட்டுக்குள் இயங்கும் உணவகங்கள் மதியம் 12 மணி வரை செயல்படலாம்.
- அனைத்து மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவைகள் மற்றும் பிற மாவட்டங்களுக்கு மக்கள் செல்வது ஆகியவை தடை செய்யப்பட்டிருக்கும்.
- குளிர் பானங்கள் மற்றும் அவற்றை சேமிக்கும் கிடங்குகள் மதியம் 12 மணிக்கு மேல் இயங்கலாம்.
- இதில் விற்பனை கவுண்டர்களுக்கு அனுமதி இல்லை.
- அரசு அதிகாரிகள் மற்றும் தனியார் துறையின் மூத்த நிர்வாகிகள் மட்டும் அத்தியாவசிய பணிகளுக்காக அலுவலகத்திற்கு வரலாம்.