ஆசிய கால்பந்து தொடரில் ஜோதிடம் மூலம் இந்திய அணி வீரர்கள் தேர்வு – வெளியான அதிர்ச்சி தகவல்!
ஆசிய கால்பந்து கோப்பை தொடரில் இந்திய அணியின் வீரர்கள் ஜோதிடம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
ஆசிய கோப்பை கால்பந்து:
2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கால்பந்து போட்டிகள் கடந்த மே – ஜூன் மாதங்களில் நடந்து வந்தது. இந்த போட்டிகளில் இறுதியில் இந்தியா இரண்டாவது முறையாக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. இந்நிலையில் இந்த போட்டிகள் குறித்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று தெரிய வந்துள்ளது. ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் இந்திய அணியின் வீரர்களை திறமையின் அடிப்படையில் பரிசீலிக்காமல் தகுதி சுற்றுக்கு ஜோதிடரை அணுகி வீரர்களின் ராசி பலன்களை கொண்டு தேர்வு செய்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
டெல்லியில் இன்று அமைச்சரவை கூட்டம் – பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா? எதிர்பார்ப்பில் மக்கள்!
இதற்காக அந்த ஜோசியருக்கு ரூபாய் 15 லட்சம் சன்மானம் வழங்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. குறிப்பாக வீரர்கள் எப்போது களத்திற்கு செல்ல வேண்டும், எந்த வரிசையில் செல்ல வேண்டும் என்று ஜோசியர் சொன்னது படியே அணியின் நிர்வாகம் செயல்பட்டுள்ளதும் அதிர்ச்சி அளிக்கிறது.