IND vs ENG 4வது டெஸ்ட் – களமிறங்க தயாராகும் அஸ்வின்! ஹர்பஜன் சாதனையை முறியடிப்பாரா?

0
IND vs ENG 4வது டெஸ்ட் - களமிறங்க தயாராகும் அஸ்வின்! ஹர்பஜன் சாதனையை முறியடிப்பாரா?
IND vs ENG 4வது டெஸ்ட் - களமிறங்க தயாராகும் அஸ்வின்! ஹர்பஜன் சாதனையை முறியடிப்பாரா?
IND vs ENG 4வது டெஸ்ட் – களமிறங்க தயாராகும் அஸ்வின்! ஹர்பஜன் சாதனையை முறியடிப்பாரா?

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதவுள்ள 4வது டெஸ்ட் போட்டியில் ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் ஹர்பஜன் சிங்கின் 417 விக்கெட்கள் எனும் சாதனையை அவர் முறியடிப்பாரா என எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

டெஸ்ட் தொடர்:

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் டிராவில் முடிவடைய, 2வது போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று அசத்தியது. ஆனால் 3வது டெஸ்டில் ஆட்டம் தலைகீழாக மாறியது. பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் இந்திய வீரர்கள் சொதப்ப ஆட்டம் முழுக்க இங்கிலாந்து வசம் சென்றது. இறுதியில் 4வது நாளில் ஆட்டம் முடிவுக்கு வர இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இதனால் தொடரை கைப்பற்ற மீதமுள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டியது அவசியம்.

Pro Kabaddi League 2021 – தமிழ் தலைவாஸ் அணியில் 7 புதிய வீரர்கள் அறிமுகம்!

எனவே இரு அணிகளும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு உள்ளன. 4வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நாளை முதல் (செப்.2) தொடங்க உள்ளது. இதற்கான 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்திய அணி வீரர்கள் விபரம் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் ரவீந்திர ஜடேஜாவின் முழங்கால் காயம் மற்றும் விராட் கோலியின் வித்தியாசமான அணுகுமுறையின் காரணமாக ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறக்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் ஜடேஜாவும் கடந்த டெஸ்ட் போட்டிகளில் பெரிதளவு சோபிக்கவில்லை.

TN Job “FB  Group” Join Now

இதனால் அவருக்கு ஓய்வு அளிக்கப்படலாம். இதனால் அஸ்வின் களமிறக்கப்பட்டால் அவர் ஹர்பஜன் சிங்கின் சாதனையை முறியடிப்பாரா? என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. டெஸ்ட் போட்டிகளில், முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் மொத்தம் 417 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் தொடரின் இறுதி 2 போட்டிகளில் விராட் கோலி தலைமையிலான அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் தற்போது 413 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள அஸ்வின் இந்த சாதனையை முறியடிப்பார் என ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!