முதன் முறையாக இணையும் ‘குக் வித் கோமாளி’ அஸ்வின் & ஷிவாங்கி – வெளியான தகவல்!

0
முதன் முறையாக இணையும் 'குக் வித் கோமாளி' அஸ்வின் & ஷிவாங்கி - வெளியான தகவல்!
முதன் முறையாக இணையும் 'குக் வித் கோமாளி' அஸ்வின் & ஷிவாங்கி - வெளியான தகவல்!
முதன் முறையாக இணையும் ‘குக் வித் கோமாளி’ அஸ்வின் & ஷிவாங்கி – வெளியான தகவல்!

விஜய் டிவி “குக் வித் கோமாளி” நிகழ்ச்சி மூலமாக மக்களிடம் பிரபலமடைந்த அஸ்வின், ஷிவாங்கி ஜோடி தற்போது சித்து குமார் இசையில் அடி பொலி என்ற பாடலில் ஒன்றாக இணைந்து பணியாற்றவுள்னளனர்.

குக் வித் கோமாளி:

விஜய் டிவி நிகழ்ச்சிகளில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த ஷோ குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டவர்களும், கோமாளிகளாக வந்தவர்களும் புகழின் உச்சத்தை அடைந்துள்ளனர். இந்த நிகழ்ச்சி முடிந்து சில மாதங்கள் ஆன நிலையில் அவர்களுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து கொண்டே உள்ளன. மக்களுக்கு கொரோனா ஊரடங்கின் போது சிறந்த ஸ்ட்ரெஸ் பஸ்டராக இந்த நிகழ்ச்சி இருந்தது.

தற்கொலைக்கு முயலும் வசுந்தரா, கவலையில் கார்த்தி – இன்றைய “தமிழும் சரஸ்வதியும்” எபிசோட்!

இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மட்டும் அல்ல பிரபலங்கள் பலரும் ரசிகர்களாக உள்ளனர். நடிகர்கள் சிவகார்த்திகேயன், சிம்பு, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஆர்ஜே பாலாஜி ஆகியோர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பங்கேற்பாளர்களை பாராட்டிச் சென்றனர். இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்ட பாடகி ஷிவாங்கி, ‘டான்’ படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்து வருகிறார். மேலும் போட்டியாளராக கலந்து கொண்ட தர்ஷா குப்தா தற்போது ‘ருத்ர தாண்டவம்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

TN Job “FB  Group” Join Now

இந்த நிகழ்ச்சியில் அனைவரின் மனதையும் கவர்ந்த நடிகர் அஸ்வின், ‘என்ன சொல்லப் போகிறாய்’ படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் அஸ்வினுடன் புகழும் இணைந்து நடிக்கிறார். மேலும் ஷிவாங்கி அஸ்வின் நடித்த ‘காதல் ஒன்று கண்டேன்’ குறும்படத்தில் இருந்து ‘கண்ண வீசி’ என்ற பாடலை நிகழ்ச்சியில் ஷிவாங்கி பாடியது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ பட இசையமைப்பாளர் சித்து குமார் இசையில் ஷிவாங்கி ‘அடி பொலி’ என்ற பாடலை பாடியுள்ளார். இந்த பாடலில் அஸ்வின் மற்றும் குஷி ரவி ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். இந்த பாடல் ஓணம் பண்டிகை அன்று வெளியாக உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!