10 வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலை – 450+ காலிப்பணியிடங்கள்!

0
10 வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலை - 450+ காலிப்பணியிடங்கள்!
10 வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலை - 450+ காலிப்பணியிடங்கள்!
10 வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலை – 450+ காலிப்பணியிடங்கள்!

ASC தெற்கு மையத்தின் கீழ் 2 ATC பாதுகாப்பு அமைச்சகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Cook, Civilian Catering Instructor, etc , பணிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

ASC Centre (South) வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி Cook, Civilian Catering Instructor, MTS (Chowkidar), Tin Smith, EBR, Barber, Camp Guard, MTS(Mali/ Gardener), MTS (Messenger/ Reno Operator), Station Officer, Fireman, Fire Engine Driver, Fire Fitter, Civilian Motor Driver & Cleaner பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு மொத்தம் 458 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exams Daily Mobile App Download

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதியானது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Tin Smith, EBR, Barber, Camp Guard, Mali/ Gardener, Messenger/ Reno operator, CCI, Cooks, Cleaner, FED, Fireman, Fire Fitter, Station Officer & Chowkidar பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 25 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Civilian Motor Driver பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 27 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும். எழுத்து தேர்வு மற்றும் Skill/Physical/Practical Test மூலம் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.21,700/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

சிறந்த coaching centre – Join Now

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.07.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here