வங்கக்கடலில் வலுப்பெறும் ‘அசானி’ புயல் – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை!

0

வங்கக்கடலில் வலுப்பெறும் ‘அசானி’ புயல் – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை!

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உள்ளது. இப்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்த புதிய புயலுக்கு ‘அசானி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

‘அசானி’ புயல் :

நாட்டில் கொரோனா வைரஸ் ஒருபுறம் அச்சுறுத்தி வரும் வேளையில், மறுபுறம் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. நாட்டின் பெரும்பாலான இடங்களில் நேற்று முன்தினம் வெப்பநிலை 45 டிகிரியை கடந்ததால் கடும் அனல் காற்று வீசியது. இந்நிலையில் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவுகிறது.

Airtel நிறுவனத்தின் புதிய 2 திட்டங்கள் – அசரடிக்கும் பலன்கள்! வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

இது வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். மேலும் இது இன்று காலை புயலாக வலுப்பெற்றது. இதற்கு ‘அசானி’ என பெயர் சூட்டப்பட்டு உள்ளன. இந்த புயலானது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக உருமாறி வடமேற்கு திசையில் நகர்ந்து 10-ம் தேதி மாலை வட ஆந்திரா – தெற்கு ஒடிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பின்னர் வடக்கு, வடகிழக்கு திசையில் ஒடிசா கடற்கரையை ஒட்டிய மத்திய மேற்குவங்கக் கடல்பகுதியை நோக்கி நகரக் கூடும்.

இதன் காரணமாக, தென்கிழக்கு மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 70-80 கி மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். மெல்ல கற்றின் வேகம் அதிகரித்து இன்று மாலை 110 கி மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 9 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் கனமழையும், 10 மற்றும் 11 தேதிகளில், மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here