திருமணத்திற்குப் பிறகான முதல் இன்டர்வியூவில் கலந்துகொண்ட ஆரியன் & ஷபானா – வைரலாகும் வீடியோ!

0
திருமணத்திற்குப் பிறகான முதல் இன்டர்வியூவில் கலந்துகொண்ட ஆரியன் & ஷபானா - வைரலாகும் வீடியோ!
திருமணத்திற்குப் பிறகான முதல் இன்டர்வியூவில் கலந்துகொண்ட ஆரியன் & ஷபானா - வைரலாகும் வீடியோ!
திருமணத்திற்குப் பிறகான முதல் இன்டர்வியூவில் கலந்துகொண்ட ஆரியன் & ஷபானா – வைரலாகும் வீடியோ!

சீரியல் பிரபலங்களான ஷபானா மற்றும் ஆரியன் இருவரும் கடந்த டிசம்பர் மாதத்தில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் ஷபானா புதிதாக திறக்க உள்ள யூடியூப் சேனலில் ஆர்யனை தான் முதன்முதலில் இன்டர்வியூ எடுக்கப் போவதாக கூறியுள்ளார்.

ஆர்யன் & ஷபானா:

ஜீ தொலைக்காட்சி ஒளிபரப்பப்படும் செம்பருத்தி சீரியலின் மூலமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் தான் ஷபானா. இவர் கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் தான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆர்யனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணம் செய்துகொண்ட புதிதிலேயே ஆர்யன் பாக்கியலக்ஷ்மி தொடரில் இருந்து விலகி வேறொரு சீரியலில் நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியானது.

ராதிகாவை திருமணம் செய்தபிறகு பாக்கியாவின் அருமையை உணரும் கோபி – ‘பாக்கியலட்சுமி’ சீசன் 2 அறிமுகம்!

பின்பு திருமணம் முடித்த கையோடு பாண்டிச்சேரியில் உள்ள குடிசை ஒன்றில் எளிமையாக தங்களது ஹனிமூனை கொண்டாடினர். பின்பு இவர்களுக்குள் ஏதோ கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிய போவதாக பல வதந்திகள் பரவிக் கொண்டே இருந்தது. இருவரின் தரப்பில் இருந்தும் எதுவும் தெரிவிக்காத காரணத்தினால் இருவரும் பிரிய தான் போகிறார்கள் என்ற வதந்தி மேலும் மேலும் பரவத் தொடங்கியது. இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேள்வி கேட்டு அதற்குரிய பதிலை கூறும் படியான ஒரு தொகுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதற்கு ஆரியன் ஏதோ ஒரு ரசிகர் கேள்வி கேட்பது போல கேள்வி கேட்டுள்ளார். ஷபானாவும் தக்க பதிலை அளித்துள்ளார். அதாவது நீங்கள் எப்போது யூடியூப் சேனல் ஓபன் செய்யப் போகிறீர்கள் எனக் கேட்டுள்ளார். அதற்கு நான் ஏற்கனவே யூடியூப் சேனல் ஒன்றை ஓபன் செய்து அதை டெலிட் செய்து விட்டு மீண்டும் அதனை ஓபன் செய்யும் ஐடியாவில் இருக்கிறேன் எனக் கூறியுள்ளார். உடனே ஆரியன் என்னை உங்களது யூடியூப் சேனலில் இன்டர்வியூ எடுப்பீர்களா என கேட்டுள்ளார். அதற்கு உங்களுக்கு இல்லாமலா உங்களுக்கு தான் முதல் உரிமை எனக் கூறும் படியான பதிவு ஒன்று சமூக வலை பக்கங்களில் வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here