‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விடுமுறை எடுத்த ஹீரோ அருண் – வைரலாகும் புகைப்படங்கள்!

0
'பாரதி கண்ணம்மா' சீரியலில் இருந்து விடுமுறை எடுத்த ஹீரோ அருண் - வைரலாகும் புகைப்படங்கள்!
'பாரதி கண்ணம்மா' சீரியலில் இருந்து விடுமுறை எடுத்த ஹீரோ அருண் - வைரலாகும் புகைப்படங்கள்!
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விடுமுறை எடுத்த ஹீரோ அருண் – வைரலாகும் புகைப்படங்கள்!

தற்போது குலுமணாலியில் உற்சாகமாக தனது விடுமுறையை களித்து வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகர் அருண் பிரசாத் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வரும் புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

நடிகர் அருண்

விஜய் டிவி ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ற சீரியல்களில் ஒன்றான ‘பாரதி கண்ணம்மா’ வில் பாரதியாக நடித்து வருபவர் நடிகர் அருண் பிரசாத். சில குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களில் துணை நடிகராக தலை காட்டி வந்த நடிகர் அருண் பிரசாத்துக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது இந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் தான். பொதுவாக சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று விரும்பும் எந்தவொரு நடிகரும் சீரியல்களில் நடிப்பதை விரும்புவதில்லை.

ஜோடியாக போட்டோஷூட் நடத்திய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் & ஐஸ்வர்யா – ரசிகர்கள் அதிர்ச்சி!

அதே போல தான் நடிகர் அருண் பிரசாத்தும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் பாரதியாக நடிப்பதற்கு ஆரம்பத்தில் தயக்கம் காட்டி வந்தார். ஆனால் சீரியலில் நடித்தது நல்லது என்று சொல்லக்கூடிய அளவுக்கு ‘பாரதி கண்ணம்மா’ தொடர் இவருக்கு மிகப்பெரிய பெயரையும், புகழையும் பெற்று தந்திருக்கிறது. அந்த வகையில் ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் பாரதியாக நடித்து வரும் நடிகர் அருண் பிரசாத் ரசிகர்கள் தனக்கு கொடுத்து வரும் ஆதரவுக்கு எப்போதும் நன்றி தெரிவித்து வருகிறார்.

‘பிக்பாஸ்’ வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்த ப்ரியங்கா, நிரூப்புடன் மோதல் – வெளியான ப்ரோமோ!

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆர்வமாக இருந்து வரும் நடிகர் அருண் பிரசாத் அவ்வப்போது எடுக்கும் படப்பிடிப்பு புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்போது குலுமணாலியில் விடுமுறை நேரத்தை செலவிட்டு வரும் நடிகர் அருண், அங்கு வைத்து எடுத்துக்கொண்ட சில அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட, ரசிகர்கள் அதனை வைரல் செய்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!