பாண்டியன் ஸ்டோர்ஸ்’ காவ்யாவுடன் இணைந்த ‘பாரதி கண்ணம்மா’ அருண் – வைரலாகும் புகைப்படம்!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ்' காவ்யாவுடன் இணைந்த 'பாரதி கண்ணம்மா' அருண் - வைரலாகும் புகைப்படம்!
பாண்டியன் ஸ்டோர்ஸ்' காவ்யாவுடன் இணைந்த 'பாரதி கண்ணம்மா' அருண் - வைரலாகும் புகைப்படம்!
பாண்டியன் ஸ்டோர்ஸ்’ காவ்யாவுடன் இணைந்த ‘பாரதி கண்ணம்மா’ அருண் – வைரலாகும் புகைப்படம்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது முல்லையாக நடித்து வரும் காவ்யா அறிவுமணியுடன் பழைய நண்பர் அருண் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இணைந்த நண்பர்கள்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை சித்து எதிர்ப்பராமல் இறந்து விட்டதால், அந்த வேடத்தில் நடிக்க பொருத்தமான நடிகை ஒருவரை சீரியல் குழுவினர் தேடி வந்தனர். அப்போது பலரும் முல்லையாக நடிக்க உள்ளதாக கருத்துக்கள் எழுந்து வந்தது. ஆனால் தமிழக மக்களிடம் அதிக பாதிப்பை ஏற்படுத்திய முல்லை கதாபாத்திரம் என்பதால் மிகவும் கவனமாகவே நடிகைகள் பெயர் பரிசீலிக்கப்பட்டது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ‘பாரதி கண்ணம்மா’ அருண் – வைரலாகும் வீடியோ!

அப்போது தான் பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியின் தங்கை வேடத்தில் நடித்து வந்த காவ்யா தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு பாரதி கண்ணம்மா சீரியல் தான் முதல் வாய்ப்பு இருந்தாலும், அதில் திறமையை வெளிக்காட்டியதால் அவருக்கு இந்த முக்கியமான வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதலில் அவர் முல்லை வேடத்திற்கு பொருத்தமாக இல்லை என்று கருத்துக்கள் பரவி வந்தது. அதன்பிறகு நாளடைவில் மக்களால் காவ்யா முல்லையாக ஏற்றுக் கொள்ளப்பட்டார்.

‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் இணைந்த சன் டிவி பிரபல நடிகை பவித்ரா – வரவிருக்கும் திருப்பங்கள்!

அந்த வகையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வருவதற்கு முன்னதாக அவர் நடித்து வந்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்கள் அனைவரிடமும் மிகவும் நட்புடன் தான் பழகி வந்தார். இன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் அருண் காவ்யாவை காண வந்துள்ளார். அவருடன் சேர்ந்து அருண் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை காவ்யா தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அதன் தனது இந்த நட்பை நீண்ட நாட்கள் கழித்து பார்ப்பதாக கூறியிருந்தார். இந்த போட்டோ தற்போது இணையத்தில் அதிக லைக்குகளை குவித்து வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!