பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து விலகும் அருண்- இவருக்கு பதில் இவர் தான்! லீக்கான தகவல்!

0
பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து விலகும் அருண்- இவருக்கு பதில்
பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து விலகும் அருண்- இவருக்கு பதில்

பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து விலகும் அருண்- இவருக்கு பதில் இவர் தான்! லீக்கான தகவல்!

கண்ணம்மா மீதுள்ள சந்தேகம் பாரதிக்கு குறைந்து கண்ணம்மாவை பாரதி ஏற்றுக்கொள்வாரா என நினைத்து கொண்டிருக்கும் வேளையில் இந்த தொடரில் பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அருண் விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. பாரதி எப்போது தான் கண்ணம்மாவை புரிந்து கொண்டு கண்ணம்மாவை ஏற்றுக்கொள்ள போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். பலருக்கும் இலவசமாக மருத்துவம் பார்க்க வேண்டும் என்பதற்காக தான் பாரதி டாக்டருக்கு படிக்கிறார். ஊரில் உள்ள பலருக்கு வைத்தியம் பார்த்த பாரதிக்கு DNA டெஸ்ட் எடுக்க மட்டும் நேரமே இருப்பதில்லை.

கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக DNA டெஸ்ட் எடுக்காமல் சீரியலை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். இதனால் ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர். சில வாரங்களாகவே பாரதி கண்ணம்மா தொடர் பின்தங்கி கொண்டே தான் செல்கிறது. இதனால் தற்போது சீரியலில் புதிதாக விக்ரம் மற்றும் ஷர்மிளா என இரண்டு முக்கிய கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். பாரதி, விக்ரம் மருத்துவமனையில் சீப் மருத்துவராக சேர்ந்துள்ளார். அதே மருத்துவமனையில் கண்ணம்மாவும் வேலைக்கு சேர்ந்துள்ளார். ஷர்மிளா வெண்பாவின் அம்மாவாக அறிமுகமாகியுள்ளார்.

வெண்பாவிற்கு தான் ஷர்மிளா ஆதரவாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் வெண்பாவிற்கே வில்லியாக இருந்து வருகிறார். வெண்பாவும் பாரதியை தான் திருமணம் செய்வேன் என தீவிரமாக இருந்து வருகிறார். இப்படி சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில் பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அருண் பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு பதிலாக புதுமுக நடிகர் அறிமுகமாக இருக்கிறார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!