பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகும் அருண் – இனி இவருக்கு பதில் இவரா? ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்!

0
பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகும் அருண் - இனி இவருக்கு பதில் இவரா? ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்!
பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகும் அருண் - இனி இவருக்கு பதில் இவரா? ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்!
பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகும் அருண் – இனி இவருக்கு பதில் இவரா? ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள பாரதி கண்ணம்மா சீரியல் டிஆர்பியிலும் கலக்கி வருகிறது. இந்நிலையில் ஹீரோ பாரதிக்கு பதிலாக வேற ஒரு நடிகர் கமிட் ஆக போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஷாக் நியூஸ்:

விஜய் டிவியில் 2019ம் ஆண்டு முதல் பாரதி கண்ணம்மா சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் பயங்கர விறுவிறுப்பாக, பல ட்விஸ்ட்களுடன் கதை சென்று கொண்டிருக்கிறது. இந்த சிரியலில் பாரதியாக அருண் பிரசாத்தும் கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்பிரியனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தனர். பின் ரோஷினி சில காரணங்களால் திடீரென வெளியேறினார். ரோஷினி விலகிய பிறகு வினுஷாதேவி , கண்ணம்மா ரோலில் நடித்து வருகிறார். மேலும் அகிலன், அஞ்சலி போன்ற கதாபாத்திரத்தில் நடித்தவர்களும் மாறினார்கள். மேலும் வில்லி வெண்பா கதாபாத்திரத்தில் ஃபரினா நடிக்கிறார்.

Exams Daily Mobile App Download

8 வருடங்களாக பிரிந்திருக்கும் பாரதி – கண்ணம்மாவை ஒன்று சேர்க்க அவரது குடும்பத்தினர்கள் எடுக்கும் முயற்சி தோல்வி அடைய, தற்போது அவர்களின் இரட்டை குழந்தைகள் அந்த முயற்சியில் இறங்கி உள்ளனர். இதற்கிடையில் வெண்பாவின் வில்ல தனத்தை ஒழிக்க, அவரது அம்மா கேரக்டரில் வலம் வரும் சர்மிளா மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளார். இவர் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் போது, இவரும் வெண்பாவை போல வில்லதனம் செய்வார் என்று தான் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக வெண்பாவுக்கே ஆப்பு வைத்து வருகிறார்.

மீனாவிடம் கோபியை திருமணம் செய்ய போவதாக சொன்ன ராதிகா – மகா சங்கமம் அடுத்து வருபவை!

தற்போது செம்ம விறுவிறுப்பாக சீரியல் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக சீரியலில், இனி பாரதி ரோலில் அருண் பிரசாத்திற்கு பதிலாக பிரபல சீரியல் நடிகரும் நடிகர் விஜய்யின் நண்பருமான சஞ்சீவ் நடிக்க போகிறாராம். இவர் சமீபத்தில் நடந்த பிக்பாஸ் சீசன் 5 ல் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே அனுப்பப்பட்டார். சன் டிவியில் திருமதி செல்வம், கண்மணி போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமான சஞ்சீவ், தற்போது பாரதி கண்ணம்மா சீரியலிலும் என்ட்ரி கொடுக்க போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!