பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகும் அருண் – இவருக்கு பதில் இவரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகும் அருண் – இவருக்கு பதில் இவரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து ரோஷினி விலகியதை தொடர்ந்து தற்போது அருண் பிரசாந்த் விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாரதி கேரக்டரில் சன் டிவியில் திருமதி செல்வம், கண்மணி போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமான சஞ்சீவ் நடிக்க போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய பாரதி:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சீரியல் பாரதி கண்ணம்மா சீரியல். இந்த சீரியல் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் டிஆர்பியிலும் கலக்கி வருகிறது. கண்ணம்மாவை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார் பாரதி. அவர்களை பிரிப்பதை முழு நேர வேலையாக வைத்திருப்பவர் வெண்பா. பாரதி – கண்ணம்மாவும் 8 வருடங்களாக பிரிந்து உள்ளனர். இவர்களை ஒன்று சேர்க்க அவரது குடும்பத்தினர்கள் எடுக்கும் முயற்சி தோல்வி அடைய, தற்போது அவர்களின் இரட்டை குழந்தைகள் அந்த முயற்சியில் இறங்கி உள்ளனர்.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு வெளியீடு – சிறப்பு குழு ஏற்பாடு!

இதற்கிடையில் ஜெயிலுக்கு போவதில் இருந்து தப்பிக்க தனது அம்மா சொல்லும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார் வெண்பா. புதிய அம்மா ஷர்மிளாவாக ரேகா என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த சீரியல் நடிகர்கள் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானவர்கள். இருப்பினும் அடுத்தடுத்து இந்த சீரியலில் முக்கிய கேரக்டர்களில் நடித்த நடிகர் – நடிகைகள் மாற்றப்பட்டு வருகின்றனர். இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.முன்பே இந்த சீரியலில் பாரதியின் தம்பியாக நடித்து வந்த அகிலன் பாரதி கண்ணம்மாவிலிருந்து விலகினார். அவரை தொடர்ந்து கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷினியும் விலகினார்.

தற்போது அவருக்கு பதிலாக வினுஷா தேவி என்பவர் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இதைத் தொடர்ந்து அஞ்சலியாக நடித்து வந்த கண்மணி மனோகரனும் பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு விலகினார்.தற்போது அதில் பாரதியாக நடித்து வரும் அருண் பிரசாத் பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு விலகுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அவருக்கு பதில் இனி பிக் பாஸ் சஞ்சீவ் நடிப்பார் எனவும் கூறப்படுகிறது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் நடிகர் மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!