இராணுவ காலாட்படை பள்ளியில் 100+ காலிப்பணியிடங்கள் – 10, 12ம் வகுப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்..!

0
இராணுவ காலாட்படை பள்ளியில் 100+ காலிப்பணியிடங்கள் - 10, 12ம் வகுப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்..!
இராணுவ காலாட்படை பள்ளியில் 100+ காலிப்பணியிடங்கள் - 10, 12ம் வகுப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்..!
இராணுவ காலாட்படை பள்ளியில் 100+ காலிப்பணியிடங்கள் – 10, 12ம் வகுப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்..!

இராணுவ காலாட்படை பள்ளி சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Group C பணிக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. எனவே தகுதி உள்ள நபர்கள் கடைசி நாளுக்குள் (25.07.2022) விண்ணப்பித்து பயன் பெறுமாறு இந்த பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் HQ, The Infantry School, MHOW
பணியின் பெயர் Group C
பணியிடங்கள் 101
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
இராணுவ காலாட்படை பள்ளி காலிப்பணியிடங்கள்:

இராணுவ காலாட்படை பள்ளியில் காலியாக உள்ள Group C பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 101 பணியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

  • DraughtsMan – 01
  • Lower Division Clerk – 18
  • Stenographer – 02
  • Civilian Motor Driver – 19
  • Cook – 43
  • Translator – 01
  • Barber – 01
  • Stenographer Grade-II – 02
  • Civilian Motor Driver (OG) – 13
  • Artist or Model Maker – 01
Exams Daily Mobile App Download
Group C கல்வி தகுதி:
  • Stenographer, Lower Division Clerk பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Civilian Motor Driver, Cook பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Translator பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக மற்றும் பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Barber, Draughtsman பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக மற்றும் பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Artist or Model Maker பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், Drawing செய்வதற்கான தகுதி சான்றிதழ் வைத்திருப்பவராகவும் இருக்க வேண்டும்.

Group C வயது விவரம்:
  • Lower Division Clerk, Translator , Stenographer Grade II, Barber, Cook ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • Civilian Motor Driver (Ordinary Grade), Artist, or Model Maker, Draughtsman ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • SC / ST – 5 ஆண்டுகள், OBC / Ex-Service Man – 3 ஆண்டுகள், உடல் ஊனமுற்றவர்கள் – 13 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வும் வழங்கப்பட்டுள்ளது.
Group C சம்பளம்:
  • Barber, Artist or Model Maker பணிக்கு Level 1 ஊதிய அளவின் படி, ரூ.18,000/- முதல் ரூ.56,900/- வரை என்றும்,
  • Lower Division Clerk, Civilian Motor Driver (OG), Translator, Cook, பணிகளுக்கு Level 2 ஊதிய அளவின் படி, ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை என்றும்,
  • Draughtsman, Stenographer Grade-II பணிகளுக்கு Level 4 ஊதிய அளவின் படி, ரூ.25,500/- முதல் ரூ.81,100/- வரை என்றும் மாத சம்பளம் கொடுக்கப்படும்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

இராணுவ காலாட்படை பள்ளி தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test, Skill Test மற்றும் Trade Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

இராணுவ காலாட்படை பள்ளி விண்ணப்ப கட்டணம்:
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.50/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
  • SC / ST / PwD பிரிவினர், உடல் ஊனமுற்றவர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் போன்றவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இராணுவ காலாட்படை பள்ளி விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதிக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். 25.07.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!