தமிழகத்தில் நாளை மறுநாள் (ஜூலை 21) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை மறுநாள் (ஜூலை 21) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை மறுநாள் (ஜூலை 21) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை மறுநாள் (ஜூலை 21) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சி மின் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மின்தடை அறிவிக்கப்பட்ட பகுதிகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது பற்றிய செய்தி குறிப்பை காணலாம்.

மின்தடை:

நாட்டில் உள்ள அத்தியாவசிய தேவைகளில் மிக முக்கியமானதாக மின்சாரம் விளங்குகிறது. மேலும் மின்வாரியங்கள் மூலம் நாட்டிற்கு பல கோடி ரூபாய் வருமானம் கிடைத்து வருகிறது. அதற்கேற்றவாறு அரசானது மக்களுக்கு தரமான மின் சேவையை வழங்குவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப மின் தேவைகளும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மின்சார வாரியம் பல எளிய சேவைகளையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் மூலம் மக்கள் தடையின்றி மின்சாரம் பெறுவதற்கு ஏதுவாக உள்ளது. மக்களின் மின் தேவைகளை அறிந்து அரசானது அதற்கேற்றவாறு மின் சேவையை வழங்கி வருகிறது.

கண்ணனை பற்றி பேசி சண்டை போடும் மீனா, வருத்தப்படும் மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

இதை தவிர மின்சார வாரியம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மாதம் ஒரு முறை மின்தடை அறிவிக்கிறது. மேலும் மின்தடை செய்யப்படும் பகுதிகளில் ஏற்படும் மின் இணைப்பு பிரச்சனைகள், மின் வயர்களுக்கு இடையூறாக இருக்கும் மரங்கள்,மரக்கிளைகள் ஆகியவற்றை அகற்றும் பணிகளில் மின் ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இத்தகைய பணிகளில் ஈடுபடும் மின் ஊழியர்களுக்கு எந்தவித பாதிப்பும் அல்லது உயிர் சேதமோ ஏற்படாத வகையில் மின்தடை செய்யப்படுகிறது.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சி மின்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளான கரிசல்பட்டி, சேரன்மாதேவி, மேலக்கல்லூர் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 21-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் இருந்து மின்விநியோகம் பெரும் கரிசல்பட்டி,பிள்ளைகுளம்,காணியாளர்குடியிருப்பு, பட்டன்காடு, இடையன்குளம், கங்கணாங்குளம், பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம், சடையமான்குளம், வெங்கட்ரங்கபுரம், சிங்கிகுளம், தேவநல்லூர், காடுவெட்டி, சேரன்மாதேவி, கரிசூழ்ந்தமங்கலம், கேசவசமுத்திரம், மேலக்கல்லூர், சுத்தமல்லி, சங்கன்திரடு, கொண்டாநகரம், நடுக்கல்லூர், பழவூர், கருங்காடு, திருப்பணிகரிசல்குளம், துலுக்கர்குளம், வெள்ளாளங்குளம் ஆகிய பகுதிகளில் ஜூலை 21(வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுவதா கல்லிடைக்குறிச்சி மின்வினியோக செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here