தமிழகத்தில் நாளை (ஆக. 2) மின் தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

1
தமிழகத்தில் நாளை (ஆக. 2) மின் தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (ஆக. 2) மின் தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (ஆக. 2) மின் தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

திருவாரூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 2) அன்று உப மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மின் விநியோகம் தடை செய்யப்பட்டு மின்தடையாகும் என மின்வாரியம் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.

மின்தடை :

சில நாட்களாகவே தமிழகத்தில் அடிக்கடி பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு மத்திய தொகுப்பில் இருந்து வரவேண்டிய மின் தட்டுப்பாடு தான் காரணம் என்றும் அதனை சரி செய்ய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் முன்னதாகவே ஒருமுறை தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து துணை மின் நிலையங்களில் ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்டங்களிலும் அப்பணிகள் மேற்கொள்வது வழக்கமாகிவிட்டது.

Exams Daily Mobile App Download

ஆனால் தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாகவும் பல இடங்களில் மின்தடை ஏற்படுகிறது. இருப்பினும் மாதாந்திர பணியானது தவறாமல் ஒவ்வொரு மாதமும் மேற்கொண்டு வருவதால் எந்தெந்த மாவட்டங்களில், பகுதிகளில் மின்தடை ஆகும் என்ற மொத்த விவரங்களையும் முன்னதாகவே மின்வாரியம் செய்திக்குறிப்பில் வெளியிட்டுவிடும். அவ்விதமாக நாளை (ஆக. 2) நீடாமங்கலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாக மின்வாரியம் தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ. 2 லட்சம் வரை நிலுவை தொகை – முக்கிய அறிவிப்பு

அதாவது, நீடாமங்கலம் துணை மின் நிலையத்தில் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அம்மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெரும் சித்தமல்லி, ரிஷியூர், ஒளிமதி, பச்சை குளம், பெரம்பூர், கானூர், பருத்திக்கோட்டை, சர்வமான்யம், வையகளத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் க. பாலநேத்திரம் தகவல் வெளியிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here