தமிழகத்தில் நாளை (ஜூலை 22) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை (ஜூலை 22) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (ஜூலை 22) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றும்(வியாழக்கிழமை), நாளையும்(வெள்ளிக்கிழமை) மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்த பதிவில் காண்போம்.

மின்தடை:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் அதிகமாக மின்தடை ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து பதிலளித்த தமிழக அரசு தமிழகத்தில் மின் உற்பத்தி திறன் குறைவாக உள்ளதால் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் போதுமான மின்சாரம் கையிருப்பு இல்லாத காரணத்தினால் இது போன்ற மின் தடைகள் ஏற்படுகின்றன. மேலும் இதுகுறித்து மத்திய அரசுடன் கலந்துரையாடி நல்ல தீர்வினை அளிப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் கூடிய விரைவில் மின் உற்பத்தியை அதிகரித்து மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு மாவட்டம் தோறும் துணை மின் நிலையங்கள் உள்ளன. இதன் மூலம் சுற்றியிருக்கும் பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது. அந்த துணைமின் நிலையங்களில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அந்த பராமரிப்பு பணிகளின் போது மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சேதமடைந்த மின் கம்பிகள் மின்பாதைகளுக்கு இடையூறாக இருக்கும் மரக்கிளைகள் அகற்றும் பணிகள், தொய்வாக உள்ள மின் பாதை கம்பிகளை சரி செய்தல் போன்ற பணிகளில் மின் ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இத்தகைய பணிகள் மேற்கொள்ளும் பொது ஊழியர்களுக்கு எந்த ஒரு இடையூறும்,உயிரிழப்பும், ஏற்படாதவாறு மின்தடை செய்யப்படுகிறது.

உலகை அச்சுறுத்தும் குரங்கு அம்மை நோய் – 14 ஆயிரம் பேர் பாதிப்பு! அச்சத்தில் பொதுமக்கள்!

அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கல்லாமொழி உப மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்தடை செய்யப்பட்டுள்ள பகுதிகளும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆலந்தலை, கல்லாமொழி, கந்தசாமிபுரம், கணேசபுரம், உடன்குடி உப மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. அதே போல் திருச்செந்தூர் கோட்டத்துக்கு உட்பட்ட திருச்செந்தூர், ஆறுமுகநேரி,சாத்தான்குளம், நாசரேத் பகுதிகளிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே ஆலந்துளை, காயாமொழி ,தைக்காவூர், நைனாபத்து, சீர்காட்சி, சதுக்கை தெரு, கொம்புத்துறை, புன்னகையல், வள்ளிவிளை, கானம், வானுபன்வினை, குலசை ரஸ்தா, பயை மின்கடை தெரு, பழங்குளம், அறிவான்மொழி, தேர்க்கன்குளம், வெள்ளரிக்காய் ஊரணி, பிரகாசபுரம், செம்பூர், பத்தவாசல், வேலன்காலனி, ஆதிநாதபுரம், இலங்கநாதபுரம், அடைக்கலாபுரம், ராமசாமிபுரம், சந்தை கடை தெரு, செடியாப்பது ரோடு, குலத்தெரு, பஸ்டான்ட் ரோடு, பரமன் குறிச்சி ரோடு, பிறைகுடியிருப்பு, கொட்டங்காடு ரோடு,படுக்கப்பத்து அரசு ஆஸ்பத்திரி, தட்டார் மடம், ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் திருச்செந்தூர் கோட்டத்துக்கு உட்பட்ட திருச்செந்தூர், ஆறுமுகநேரி,சாத்தான்குளம்,நாசரேத் ஆகிய பகுதிகளில் நாளை(வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த பகுதிகளுக்கு உட்பட்ட தோப்பூர், அமலிநகர், கடாட்சபுரம், மானாடு, செட்டிவிளை, சோலை குடியிருப்பு, ஓடக்கரை, பூந்தோட்டம், தெற்குமறந்தலை, இடையன்விளை, நாலுமாவடி, வீரமணிக்கம், பொத்தகாளன்விளை, நரையன்குடியிருப்பு, பழங்குளம், சவேரியார் குலம், உடையார்குளம், ஆழ்வார்தோப்பு, வரதராஜபுரம், இலங்கநாதபுரம், ராமசாமிபுரம், லட்சுமிபுரம், வேப்பங்காடு, புதுமனை பள்ளிவாசல், மணப்பாடு, சுண்டங்கோட்டை, அம்பாள்குளம், உத்திரமாடன் குடியிருப்பு, உடைபிறப்பு, கட குளம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று திருச்செந்தூர் மின் விநியோக செயற்பொறியாளர் விஜய சங்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here