தமிழகத்தில் ஆகஸ்ட் 4ம் தேதி மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் ஆகஸ்ட் 4ம் தேதி மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் ஆகஸ்ட் 4ம் தேதி மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் ஆகஸ்ட் 4ம் தேதி மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதி துணை மின் நிலையத்தில் நாளை (04. 08 .2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அப்பகுதியில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போது மின் தடை செய்யப்பட உள்ள பகுதிகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

மின்தடை அறிவிப்பு

இன்றைய கால கட்டத்தில் மின்சாரம் இல்லாமல் எவ்வித வேலைகளையும் செய்ய முடியாது என்ற நிலை வந்து விட்டது. முன்பெல்லாம் கிராம பகுதிகளில் மின் வசதி குறைவாக இருக்கும் தற்போது அனைவரும் மின் இணைப்பு பெற்றுள்ளனர். அதனை தொடர்ந்து வளர்ந்து வரும் தொழில் நுட்பத்திற்கு மின்தேவை அதிகமாக உள்ளது. இந்த மக்களுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்கும் நோக்கில் அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் தவறாது மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.இந்த பராமரிப்பு பணிகளின் போது கம்பங்களை மாற்றுதல் வயர்களை சரி செய்தல், பழுதடைந்த மின் கம்பிகளை மாற்றுதல், மின் இணைப்புகளை சரி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு – பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு!

அதனை தொடர்ந்து சில முக்கிய பணிகள் காரணமாகவும் மின்தடை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது திருச்சி மாவட்டம் துறையூர் கோட்டம் சிக்கத்தம்பூர் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட முருகூரில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்க விஸ்தரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. அதனால் அப்பகுதியில் மின் விநியோக, தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து துறையூர் மின் கோட்ட செயற்பொறியாளர் செய்தி குறிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

Exams Daily Mobile App Download

மேற்சொன்ன குடிநீர் திட்ட பணிகள் காரணமாக சித்திரப்பட்டி, கொல்லப்பட்டி, கலிங்கமுடையான்பட்டி, சங்கம்பட்டி, காமாட்சிபுரம், சேனப்பநல்லூர், காமநாயக்கன்பட்டி, வி.ஏ. சமுத்திரம், எரகுடி, வடக்குப்பட்டி, வீரமச்சான் பட்டி, மதுராபுரி, குடில் ரோடு, திருச்சி ரோடு, ஆத்தூர் ரோடு, பாலக்கரை, கீரம்பூர், சொரத்தூர், சத்திய நாராயண சிட்டி, வெங்கடேசபுரம் ஆகிய பகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 04) காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here