தமிழகத்தில் ஆக. 4 & 6ல் மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் ஆக. 4 & 6ல் மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் - மின்சார வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் ஆக. 4 & 6ல் மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் - மின்சார வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் ஆக. 4 & 6ல் மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி, கல்லல் பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை(ஆகஸ்ட் 4) மின்தடை செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சிவகங்கை மாவட்ட செயற்பொறியாளர் ஏ.கே. முருகையன் தெரிவித்துள்ளார்.

மின்தடை:

இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி அதிவேகமாக வளர்ந்து கொண்டே செல்கிறது. அதற்கேற்றவாறு மின் தேவைகளும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கனரக தொழிற்சாலைகளும், தனியார் தொழில் நிறுவனங்களும் அதிகரித்து வருவதால் நாட்டில் அதிகமான மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் விதமாக மத்திய மாநில அரசுகள் இணைந்து மின் உற்பத்தியை பெருகுவது குறித்து ஆலோசித்து வருகின்றன. மக்களும் அதற்கேற்ப மின்சாரத்தை சிக்கனமாக செலவு செய்வது அவசியமானதாகும்.

Exams Daily Mobile App Download

தமிழகத்தில் மாவட்டம் தோறும் உள்ள துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்படுவது வழக்கம். இவ்வாறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதன் மூலம் தடையில்லா மின்சாரத்தை வழங்க முடியும். அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி, கல்லல் பகுதிகளுக்கு உட்பட்ட ஓக்கூர், கீழமங்கலம், காடனேரி, அம்மன்பட்டி, நகரம்பட்டி, காளையார்மங்கலம்,கருங்காப்பட்டி, தச்சம்பட்டி, கருங்காலக்குடி, அண்ணா நகர், பர்மா காலனி, நாலுகோட்டை, ராமலிங்கபுரம்,வீழநேரி, நாமனூர், அலவாக்கோட்டை, சிங்கினிபட்டி, அம்மாச்சிப்பட்டி, பிரவலூர், பேரணிப்பட்டி ஆகிய கிராமங்களிலும், அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் நாளை (ஆகஸ்ட் 4) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு ‘ரெட்’ அலெர்ட் எச்சரிக்கை – பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்

அதே போல் காரைக்குடி அருகே உள்ள கல்லல் துணை மின் நிலையத்தில் நடைபெறவிருக்கும் பராமரிப்பு பணிகள் காரணமாக கல்லல், குறுந்தம்பாடு,ஆலம்பட்டு, அரண்மனை சிறுவயல், மாலை கண்டான், வெற்றியூர், சாத்தரசம்பட்டி, கௌரிபட்டி, பாகனேரி, பனங்குடி, நடராஜபுரம், கண்டிப்பட்டி, செம்மனூர், செவரக்கோட்டை, சொக்கநாதபுரம், கீழக்கோட்டை, ஆகிய பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்ய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து காரைக்குடி துணை மின் நிலையத்தில் வருகிற சனிக்கிழமை (ஆகஸ்ட் 6) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காரைக்குடி நகர் பகுதிகள், பேயன்பட்டி, வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள், செக்காலைக்கோட்டை, பாரிநகர், கல்லூரிச்சாலை, செக்கலைசாலை, புதிய பேருந்து நிலையம், கல்லுக்கட்டி, பழைய பேருந்து நிலையம், கோவிலூர் சாலை, செஞ்சை, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!